நண்பனின் உடலை சுமந்து சென்ற நடிகர் சந்தானம்!… உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு

38810

மாரடைப்பால் திடீரென்று உயிரிழந்த நடிகர் சேதுவின் இறுதி ஊர்வலத்தில் நெருங்கிய நண்பரான சந்தானம் கலந்து கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் தற்போது 144 தடை உத்தரவு பின்பற்றிவரப்படுகிறது.

இதனால் சேதுராமனின் இறுதி ஊர்வலத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில் , சேதுராமனின் இறுதி ஊர்வலத்தில் நடிகர் சந்தானம் கலந்து கொண்டு நண்பரின் உடலை சுமந்து சென்ற புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இந்நிலையில், சேதுராமனின் மறைவு குறித்து நெருங்கிய நண்பரான சந்தானம் டிவிட்டியிருக்கிறார்.

அதில், என் நெருங்கிய நண்பர் டாக்டர் சேதுவின் மறைவால் முற்றிலும் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்திருக்கிறேன்.

அவரது ஆன்மா அமைதியுடன் ஓய்வெடுக்கட்டும் என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.