குடும்பத்துடன் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்.. நடிகை ரோஜா வெளியிட்ட விழிப்புணர்வு புகைப்படம்..!

625

கொரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க பிரதமர் மோடி பல விழிப்புணர்வுகளை மக்களை கடைப்பிடிக்க கூறியிருந்தார். மேலும் தமிழ்நாட்டில் 24-ம் திகதி மாலை 6 மணி முதல் வரும் 31 ஆம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதையடுத்து, பிரபல நடிகை மற்றும் ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதி எம்.எல்.ஏ ரோஜா பிரதமரின் அறிவுரைப்படி தனது குடும்பத்தினருடன் கைதட்டினார்.

இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நடிகை ரோஜா எம்.எல்.ஏ, மோடியின் ஊரடங்கு உத்தரவை அடுத்து நகரியில் எனது மகள் மற்றும் மாமியார், உறவினருடன் இருந்தேன். நான் நடிகையாக அரசியல்வாதியாக ஓய்வின்றி இருந்தேன்.

எனது மகளுக்கு மிகவும் பிடித்தமான மீன் வறுவல், கேரட் பொரியல், தக்காளி கறி போன்றவற்றை சமைத்து வழங்கினேன். கரோனாவில் இருந்து நம்மையும் பாதுகாத்து கொண்டு, நாட்டினையும் பாதுகாக்கலாம். இதற்காக யுத்தங்கள் புரியாமல், அரசு கூறும் நிபந்தனையை பின்பற்றினாலே போதுமானது.

இதில் தைரியத்துடன் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உறுப்பினர்கள், காவல் துறையினர் மற்றும் சுகாதார துறையினருக்கு பாராட்டுகளை தெரிவிக்கும் பொருட்டு கைகளை தட்டி நன்றிகளை தெரிவித்துள்ளோம்.

இராணுவம் போல செயல்படும் நபர்களால் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 2.5 இலட்சம் தன்னார்வலர்கள் மூலமாக கரோனா மாநிலத்தில் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. நமக்காக உழைத்து வரும் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.