*தூதுவளை உடல் உஷ்ணத்தை அதிகரித்து உடலில் உள் உள்ள சளி, இருமலை வெளியேற்றும். இதில் இரும்பு சத்து, வைட்டமின் சி உள்ளன.நம்ம பாட்டிகள் அந்த காலத்தில் செய்த கை வைத்தியங்களில் சில நமக்காக!

*தூதுவளை ஆஸ்துமா,அலர்ஜி, சளி, இருமல், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், ஒவ்வாமை, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கு தூதுவளை சிறந்த மூலிகையாக உள்ளது.

தும்பை :

*தும்பை பூவை தினமும் கொஞ்சம் வாயில் போட்டு மென்று வந்தால் தொண்டையில் சதை ஏற்படாமல் தடுக்கும். தொண்டைப்புண் ஆறும்.

*தும்பையை ஆயூர்வேதத்தில் துரோன புஸ்பி என்று சொல்வோம். தும்பை சர்க்கரை நோய்க்கு, விஷ ரோகங்களுக்கு மூல நோய்க்கும் நல்ல பலனைத் தரும்.

*தும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் அரைத்து சுத்தமான எண்ணெயில் கலந்து காய்ச்சி காதிற்கு சொட்டு மருந்தாக விட்டு வந்தால் காதில் சீழ்வடிதல் குணமாகும்.

நந்தியா வட்டம் :

*நந்தியா வட்டை ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.இதனுடைய பூவும் இலையும் மருத்துவ பயன்கள் உடையன.

*இதன் வேர் கசப்பாக இருக்கும் ஆனால் சுவைக் கொண்டவை சிறிது துவர்ப்புச் சுவை உடையவை உடல் சூட்டை சீராக்கி வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும்.

*கண் பார்வை மங்களாக உள்ளவர்களுக்கும், பக்கவாதம், சிறுநீர்க் குழாயில் ஏற்படும் சுருக்கம், மூட்டுகளில் ஏற்படும் வலி போன்றவைகளுக்கு வேர் சிறந்த மருந்தாக உள்ளது.

*இதன் பூக்கள் வாசனையாகவும், குளிர்ச்சி தன்மை உடையவை. கண் எரிச்சல் கண் சம்மந்தப்பட்ட நோய்களுக்கும், தோல் வியாதிகளுக்கும் பூ சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

புளியம்பழம் :

*புளி குளுமை அகற்றி, விதையின் பருப்பு பாலுடன் கலந்து பேதி மருந்தாக பயன்படுகிறது. பூச்சிகளை அகற்றி அஜீரணத்தைப் போக்கி உடலைக் குளிரச் செய்யும்.

* இலைகளின் சாறு இரத்த மூலத்திற்கும், சிறுநீர் கழித்தலின் போது வலி ஏற்பட்டால் வலியை குணப்படுத்தும். காய்ச்சலைப் போக்கும்