லண்டனில் இருந்து வந்த என் மகன் எப்படி தனிமைபடுத்தப்பட்டிருக்கிறான்? பிரபல தமிழ் நடிகை வெளியிட்ட காட்சி

18077

பிரபல திரைப்பட நடிகையான ஹாசினி லண்டனில் வந்திருக்கும் தன்னுடைய மகன் எப்படி தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார் என்பது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சற்று முன் வரை இந்த வைரஸினால் 315 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று நாட்டில் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகையும், இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியுமான சுஹாசினி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அவருடைய மகன் சமீபத்தில் லண்டனுக்கு சென்று திரும்பியுள்ளார். பிரித்தானியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகம் இருப்பதால், அங்கிருந்து வரும் மக்கள், அதுமட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து வரும் மக்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

அந்த வகையில் சுஹாசினியின் மகனும், தனி அறை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதில் சுஹாசினி, இது என்னுடைய மகன் நந்தன், நான் அவனிடம் 10 அடி தள்ளி பேசுகிறேன், அவன் தனி அறை ஒன்றில் இருக்கிறான் என்று கூறுகிறார்.

அதன் பின் நந்தன் கூறுகையில், நான் லண்டனில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன், கொஞ்சம் பொழுது போகவில்லை தான், இருப்பினும் இது தான் நல்லது. ஒரு 14 நாட்கள் நாம் தனியாக இருந்தால், நமக்கு மட்டுமின்றி, நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.