பிரபல சீரியல் நடிகை நீலிமா எடுத்த அதிரடி முடிவு.. ஷாக்கான ரசிகர்கள்!

10163

தமிழ் திரையுலகில் தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் நீலிமா. இப்போது சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டையும் கலக்கி வருகிறார். தமிழில் 50 சீரியல்களுக்கு மேல் நடித்துள்ள இவர், 30க்கும் அதிகமான படங்களில் சிறு,சிறு ரோல் செய்திருக்கிறார்.

அதிலும் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் நீலிமாவின் ரோல் வெகுவாகப் பேசப்பட்டது. வாணிராணி, செல்லமே என பல சீரியல்களில் நடித்திருக்கும் நீலிமா, இப்போது அரண்மனைகிளி சீரியலில் நடித்து வருகிறார். மேலும் தனியாகவே ஒரு சீரியலை தயாரித்தும் வருகிறார். அது இப்போது 500 எபிசோடுகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. நடுத்தர குடும்பத்தில் பிறந்த நீலிமாவுக்கு சினிமா மூலம் முன்னேறியவர்.

நான் மகான் அல்ல படத்தில் நடித்ததற்கு நீலிமாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்தது. இவர் இசைவாணன் என்பவரை திருமணம் செய்யும்போது இருபது வயதே ஆகியிருந்தது. இந்த தம்பதிக்கு இசை என்ற பெயரில் இரண்டு வயது குழந்தை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குழந்தையின் பிறந்தநாளை ஒவ்வொரு நாட்டில் கொண்டாடுவது நீலிமாவின் ஸ்டைல்.

இந்நிலையில் சீரியலில் நீலிமாவுக்கு முக நல்ல பெயரை வாங்கிக் கொடுத்த அரண்மனை கிளி சீரியலில் இருந்து தான் ஒதுங்குவதாகவு, இனி அதில் நடிப்பது இல்லை எனவும் பகிர்ந்திருக்கிறார் நடிகை நீலிமா. இதுகுறித்து நீலிமா கூறும்போது, ‘நான் எப்போதும் கேமராவின் முன்னால் நடிக்கும்போது சந்தோசமாக இருப்பேன். காலத்தின் கட்டாயத்தாலும், சில பொறுப்புகளாலும் நான் இனி அரண்ம்னைக்கிளியில் நடிக்க மாட்டேன்.’என கூஇயிருக்கிறார் நீலிமா. இது அரண்மனைக்கிளி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.