தினமும் காலையில் ஒரு ஸ்பூன் வெந்தயம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

804

வெந்தயம் பலவகையான உடல் நோய்களை குணப்படுத்தும். வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் உண்டாகும் எண்ணற்ற பிரச்சனைகளை சரிசெய்யலாம்.ஒரு ஸ்பூன் வெந்தயம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

வெந்தயத்தின் சத்துக்கள்:
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து,மாவுச்சத்து, இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற் தாதுப் பொருட்களும் தயாமின், ரிபோபிளேவின், நிகோடின் அமிலம், வைட்டமின் ஏ போன்றவைகளும் அடங்கியுள்ளன.

தோல் நோய்கள் :
நமது தோல்களில் கிருமி தொற்றால் ஏற்படும் அரிப்பு சில பூச்சிகளால் கொப்புளங்கள் மற்றும் புண்கள் ஏற்படுகின்றன.

இதற்கு வெந்தயத்தை அரைத்து தூளாக்கி அதனுடன் கஸ்தூரி மஞ்சளை கலந்து இரண்டையும் சிறிது தண்ணீர் விட்டு அரிப்பு, புண்கள் ஏற்பட்ட இடங்களில் தடவி இதை தொடர்ந்து செய்து வந்தால் நோய் குணமாகும்.

நீரிழிவு நோய் :
கணையத்தில் இன்சுலின் சுரப்பில் கோளாறு ஏற்படுவதால் நீரிழிவு நோய் உண்டாகிறது வெந்தயம் மற்றும் வெந்தயகீரையை அடிக்கடி உணவில் உண்டு வந்தால் நீரிழிவு வராமல் தடுக்கலாம்.

மாதவிடாய் பிரச்சனை :
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் இயற்கையானது இது வலி நிறைந்ததாக மாறிவிடுகிறது இரவு நேரத்தில் சிறிது வெந்தயத்தை அரைத்து சாப்பிட்டு நீரை குடித்து வந்தால் வலி குறையும்.

இதய ஆரோக்கியம்:

வெந்தயத்தை அடிக்கடி உணவில் உட்கொண்டு வந்தால் இரத்தத்தில் கொழுப்பு படிவதை தடுத்து இதயம் சம்மந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

சிறுநீரக பிரச்சனை :
சிறுநீரகம் இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது.
வெந்தயம் ஊற வைத்த நீரையோ அல்லது வெந்தயம் வேக வைத்த நீரையோ குடித்து வந்தால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் தடுக்கலாம்.

தாய்ப்பால் சுரப்பு :
புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு தாய்பால் சுரப்பதில் பிரச்சனை ஏற்படுகின்றன. இதற்கு தினமும் இருவேளை வெந்தயத்தை உணவுகளில் உட்கொண்டு வருவதால் தாய்ப்பால் நன்கு சுரக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.

தலைமுடி :
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து பசுந்தயிரில் கலந்து அரைத்து தலையில் நன்றாக தேய்த்து வந்தால் இதை தொடர்ந்து செய்து வருவதால் முடி உதிர்வு பிரச்சனைகள் நீங்கும்.

அல்சர் குணமாக :
இரவில் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரைக் குடித்து வந்தால் அல்சர் குணமாகும்.

வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள், அல்சர் குணமாகும்.