அளவில்லா மருத்துவ குணம் உடைய வெள்ளைப்பூண்டு…

333

வெங்காயத்தை ஈரவெங்காயம் என்றும், பூண்டை வெள்ளை வெங்காயம் என்றுதான் அழைப்பார்கள்.

பூண்டில் இரண்டு வகைப்படும். ஒன்று மலைப்பூண்டுப் பல் இன்னொன்று நாட்டுப் பூண்டுப் பல்… மலைப்பூண்டுப் பல் கொஞ்சம் பெரிதாக இருக்கும்.. நாட்டுப் பூண்டு பல் கொஞ்சம் சிறியதாக இருக்கும்.

சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களில் மருத்துவக் குணங்கள் அதிகம் உள்ள பொருள் எதுவென்று கேட்டால் அது பூண்டுதான். முதல் தனிச்சிறப்பு கொண்டது.

பூண்டில் ஆண்ட்டி பயாட்டிக் சக்திகள் அதிகமாக இருக்கிறது. உடலில் ஏற்படுகிற பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை விரட்டி அடிக்கும் சக்தி பூண்டிற்கு உள்ளது.

பூண்டு எல்லா நாட்களிலும் கிடைக்கக்கூடிய பொருள். பூண்டில் பாஸ்பரஸ் கேஸ் அதிகமாக உள்ளது. இதனால் பூண்டை உரிக்கும்போதோ, அல்லது பச்சையாக சாப்பிடும்போதோ ஒரு கெட்ட நாற்றம் வருகிறது. பூண்டை லேசாக வறுத்தாலோ அல்லது சமைத்தாலோ அதில் உள்ள கெட்ட வாடை போய்விடும்.

பூண்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது. பூண்டை சமைத்து சாப்பிட்டால் அதில் உள்ள அலிசின் சத்து குறைந்து விடும்.

பூண்டை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
  • 2 அல்லது 3 பூண்டு சாற்றையுடன், இஞ்சிச் சாற்றை கலந்து தினமும் இரு முறை சாப்பிட்டு வந்தால் நெஞ்சு வலி நீங்கும்.
  • பூண்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வாத நோய் தீரும்.
  • தூக்கம் வரவில்லையென்றால் பாலில் 2 பூண்டு பல்லை நசுக்கி போட்டு, காய்ச்சி தினமும் தூங்கும் முன் குடித்து வந்தால் நன்றாக தூக்கம் வரும்.
  • உடலில் உண்டாகும் பாக்டீரியா தொற்றை போக்க 2 பூண்டு பல்லை சாப்பிட்டால் போதும். தொற்று உடலிலிருந்து நீங்கிவிடும்.
  • இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க பூண்டு உதவுகிறது.
  • ஆஸ்துமா, சுவாசப் பிரச்சினையை பூண்டு சாப்பிடுவதால் சரியாகும்.
  • இரத்தக்கட்டிகள், இரத்தக்குழாய் கொழுப்பு, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைக்கு பூண்டு மிகச் சிறந்த
  • 3 பூண்டுடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லை நீங்கும்.