நடிகர் விஜய்சேதுபதி மீது செம கோபத்தில் பதிவுபோட்ட நடிகை காய்த்ரி ரகுராம்.. அப்படி என்ன பதிவு போட்டார் தெரியுமா?

1944

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் நடிகர் விஜ்ய் சேதுபதி பேசும்போது“இன்னொரு வைரஸ் இருக்கிறது. அதற்குப் பெயர் என்னவென்று தெரியவில்லை. கடவுளுக்காகச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. நாம் அனைவரும் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் இங்கு பலகோடி வருடங்களாக இருக்கிறது. ஆனால் கடவுள் இன்னொரு கடவுளைக் காப்பாற்றும் மகா மனிதரைப் படைக்கவே இல்லை. கடவுள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். கடவுளைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லும் எந்தவொரு கூட்டத்துடனும் தயவு செய்து பழகாதீர்கள். அது ரொம்பவே முக்கியம்.

கடவுளைச் சாதாரண மனிதனால் காப்பாற்றவே முடியாது. அது பொய். அதெல்லாம் நம்பவே நம்பாதீர்கள். யாராவது இது தொடர்பாக உங்களிடம் பேசினால் திருப்பி என்னுடைய மதத்தில் என்ன சொல்கிறது என்றால் என்ற பதிலைச் சொல்லாதீர்கள். அதற்குப் பதிலாக மனிதத்தையும் மனித நேயத்தையும் சொல்லிக் கொடுங்கள். மனிதரை மதிக்கச் சொல்லிக் கொடுங்கள்.

கடவுள் மேலே இருக்கிறார். மனிதன் தான் பூமியில் இருக்கிறான். ஆகையால் மனிதனை மனிதனால் தான் காப்பாற்ற முடியும். மேலே இருந்து எதுவும் வராது. இது மனிதர்கள் வாழுவதற்கான இடம். மனிதன் சகோதரத்துவத்துடன் சந்தோஷமாக அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழவேண்டும். மதத்தைச் சொல்லி கடவுளையே பிரிக்கிறார்கள். கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே மதம் அவசியமில்லாதது.”என பேசினார்.

விஜய் சேதுபதி பேச்சைப் பாராட்டி ஒருதரப்பும், விமர்சித்து ஒருதரப்பும் இதை ஒரே நாளில் செம வைரல் ஆக்கிவிட்டனர். இந்நிலையில் பிரபல டான்ஸ் மாஸ்டர், நடிகை, பிக்பாஸ் பிரபலம், பாஜக ஆதரவாளர் என பன்முகத்தன்மைக்க்கொண்ட நடிகை காயத்ரி ரகுராம், விஜய் சேதுபதிக்கு எதிராக செம காண்டாக ஒரு பதிவு போட்டு இருக்கிறார். அதில், ‘என்னொரு மனிதரை நம்ப வேண்டும் என்ற நண்பருக்கு குட்லக். எந்த நம்பிக்கையும் அழிக்க முடியாது. அனைத்து மதங்களிலும் பலகோடிபேர் இருக்கிறார்கள்.அவர்களை நீங்கள் முட்டாள் என நினைத்தால் நான் உங்களை நினைத்து வருத்தப்படுகிறேன். மனிதர்கள்தான் வெறுப்பை காட்டுவார்கள். பொய் சொல்வார்கள். வாழ்க்கையை வடிவமைப்பது கடவுள்’ தான் அதில் காட்டமாக போட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.