கோவக்காயின் அற்புதங்கள் தெரிஞ்சிக்கோங்க… எவ்வளவு வைட்டமின்கள் இருக்கு தெரியுமா..?

643

கோவக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் கே போன்ற சத்துக்கள் உள்ளன.கோவக்காயின் அற்புதங்கள் தெரிஞ்சிக்கோங்க… இவ்வளவு வைட்டமின்கள் இருக்கு.

வயிற்றுப்பிரச்சனைகள்:
கோவக்காயின் முக்கிய அம்சம் அதிலுள்ள கசப்புத்தன்மையே. இந்த கசப்புத் தன்மை வயிற்றுப்பிரச்சனைகளான வயிற்று வலி, வயிற்றுப்புண், அல்சர் போன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகின்றது. வாரம் ஒரு முறையேனும் கோவக்காயை சமைத்து உண்பதால் அனைத்து வகையான நோய்களுக்கும் தீர்வாக அமைகிறது.

நீரிழிவு:
நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் உணவில் கோவக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து சிறுநீரில் அதிக அளவு சர்க்கரை சத்துக்கள் வெளியேறாமல் பாதுகாக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கோவக்காயை சாப்பிடுவது நல்லது.

புற்று நோய்:
புற்று நோய் என்பது ஒரு கொடுமையான வியாதி கோவக்காய் பெருங்குடல், ஜீரண உறுப்புகளில் தேங்கியிருக்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி வயிற்றில் புற்று நோய் ஏற்படாமல் இருக்க உணவில் அடிக்கடி கோவக்காயை சாப்பிட்டு வந்தால் புற்று நோய் வராமல் தடுக்கலாம்.

கல்லீரல்:
கல்லீரலில் அதிக அளவு நச்சுக்கள் சேருவதாலும், அதிக அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது.

கோவக்காயை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள், நச்சுக்கள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகிறது.

ஊட்டச்சத்து:
கோவக்காயில் பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் எலும்பு வளர்ச்சி, மற்றும் இரத்தம், இதயம் போன்ற உறுப்புகளுக்கு கோவக்காய் நல்ல ஊட்டச்சத்தை அளிக்கிறது.

பொடுகு பிரச்சனை:
தலையில் பொடுகு, முடி கொட்டுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கோவக்காயை ஜூஸ் போட்டு குடிக்கலாம். கோவக்காயை அரைத்து சக்கையை எலுமிச்சை பழத்துடன் சேர்த்து தலைக்கு தடவி வந்தால் முடி கொட்டுதல், பொடுகு போன்ற பிரச்சனையை சரி செய்கிறது.

பற்கள்:
பற்களில் பல் வலி ஏற்படுதல் ஈறுகளில் வீக்கம், மஞ்சள் கறை, இரத்தக் கசிவு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கோவக்காயை ஜூஸ் போட்டு குடித்து வந்தால் இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

செரிமானம்:
கோவக்காயில் நார்ச்சத்து உள்ளது. கோவக்காயில் உள்ள நார்ச்சத்து உடலில் உணவை செரிக்க வைத்து குடல் மற்றும் இரைப்பை சார்ந்த வியாதிகளை சரி செய்கிறது.

கண்பார்வை:
கோவக்காயில் உள்ள விதைகள் மற்றும் என்சைம்கள், தாதுக்கள் கண்பார்வையை அதிகரிக்கச் செய்யும் கோவக்காயை உணவில் அடிக்கடி உண்டு வந்தால் கண்பார்வை குறைபாடு ஏற்படாது.

தலைவலி:
தலைவலி ஏற்படும் போது கோவக்கொடியின் வேரை அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குணமாகும்.

சளி மற்றும் இருமல்:
சளி, மற்றும் இருமல் உள்ளவர்கள் கோவக்கொடியின் வேரை நீரில் சுண்டக் காய்ச்சி தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் சளி இருமல் மற்றும் குணமாகும்.

கோவக்காயின் இலை:
கோவக்காயின் இலைகள் கல்லீரல், மண்ணீரல், தோல் நோய், கண் பார்வை போன்ற பாதிப்புகளை குணப்படுத்துகிறது.

கோவை இலையின் சாறை உச்சந்தலையில் தடவி வந்தால் வழுக்கை நீங்கி முடி நன்கு வளரும்.

காயங்கள்:
புண்கள், வெட்டுக்காயங்கள், வீக்கம் ஏற்பட்டால் கோவக்காயின் வேர்களை நீரில் நன்கு காய்ச்சி அந்த நீரை காயங்கள் மீது ஊற்றி அலசி வந்தால் காயங்கள் உடனே ஆறும்.

சரும பிரச்சனை:
கோவப்பழத்தின் இலைகளை நீரில் சுண்டக் காய்ச்சி அந்த நீரை குடித்து வந்தால் சருமத்தில் ஏற்படும் தேமல் போன்றவை குணாமாகும்.