எப்படி இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த்.. தற்போது கிடைத்த அரிய வாய்ப்பு.. ரசிகர்கள் ஆரவாரம்.. என்ன தெரியுமா?

877

தமிழ் சினிமாவின் 90ஸ் ஹேண்ட்ஸம் ஹீரோ பிரஷாந்த். ‘டாப்ஸ்டார்’ என தன் ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவரது முந்தைய பட்டப்பெயர் ஆணழகன்.

எக்கச்சக்கமான பெண் ரசிகைகளைக் கொண்ட இவர் பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் என முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்தவர்.

ஷங்கரின் இயக்கத்தில் இவர், ஜீன்ஸ் படம் மூலம் உலக அழகி ஐஸ்வர்யாராயுடன் நடித்து உலகமெங்கும் வெற்றி கதாநாயகனாக ஜொலித்து வந்தார்.

இன்றைய தலைமுறையின் தல, தளபதியெல்லாம் அப்போது பிரசாந்த் என்ற நடிகருக்கு பின்வரிசையில் இருந்தவர்கள் என்றுக்கூட சொல்வார்கள். அப்படி தமிழ் சினிமாவில் வலம் வரத்தொடங்கி அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

2000ம் ஆண்டுக்கு பின்னர் இடைவெளிவிட்ட பிரசாந்த் பொன்னர் சங்கர் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். கடைசியாக வெளியான மம்பட்டியான் உள்ளிட்ட அவரது படங்கள் பெரிதாக ஹிட் அடிக்காததால், சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

அதன் பின், தெலுங்கில் ராம் சரண் தேஜா நடித்த ‘வினய விதேய ராமா’ படத்தில் அவரது அண்ணனாக பிரஷாந்த் தோன்றியது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது.

ஆனால், எந்த படமும் இவரை அடுத்த ரவுண்டுக்கு தயாராக்கும் வகையில் இல்லை, இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த வித எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. ஆனால், தற்போது அந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆம், சமீபத்தில் ஹிந்தியில் வெளியான படம் அந்தாதுன். இந்த படத்தின் பட்ஜெட் 32 கோடி ரூபாய் தான். ஆனால், உலகம் முழுதும் 456 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் நடிகர் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மோகன்ராஜா இயக்கிய வேலைக்காரன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அந்த படத்திற்கு பிறகு எந்த படத்தையும் இயக்காமல் இருந்த இவர் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என கூறப்பட்டது.

ஆனால், நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் பிஸியாகி விட்டதால் பிரஷாந்த்-தை வைத்து அந்தாதுன் ரீமேக் படத்தை இயக்கவுள்ளார் என கூறுகிறார்கள். பிரஷாந்துக்கு இந்த கூட்டணி மட்டும் அமைந்து விட்டால் நம்ம டாப் ஸ்டார் மீண்டும் டாப்பில் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என பொதுவான ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.