மௌனராகம் சீரியல் வில்லி ஷமிதா யார் தெரியுமா? இந்த நடிகரின் மனைவியாம்

1239

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் சீரியலில் வில்லியாக பட்டையை கிளப்பி வருகிறார் ஷமிதா ஸ்ரீகுமார்.

இயக்குனர் சேரன் இயக்கத்தில் உருவான பாண்டவர் பூமி என்ற படத்தின்மூலம் நடித்து பிரபலமானவர்.

அதன்பின்னர் என்னவோ என்ற படத்தில் நடித்தாலும் சரியான வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் தாவினார்.

இங்கு சன் டிவியில் ஒளிபரப்பான சிவசக்தி என்ற சீரியல் மூலம் பிரபலமானார்.

அந்த சீரியலிலேயே நடித்த ஸ்ரீ என்பவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

முதலில் ஷமிதா தன்னுடைய காதலை வெளிப்படுத்த யோசித்து ஓகே சொன்னாராம் ஸ்ரீ.

தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் மிக எளிமையாக திருமணமும் நடந்து முடிந்தது, இவர்களுக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

தொடர்ந்து பிள்ளைநிலா, பொன்னூஞ்சல் போன்ற தொடர்களில் முக்கியகதாபாத்திரமாக நடித்த ஷமிதா, தற்போது வில்லியாக அசத்தி வருகிறார்.

சீரியலில் வில்லி என்றாலும் நிஜ வாழ்வில் மென்மையான ஷமிதாவுக்கு தென்னிந்திய அசைவ உணவுகள் என்றால் கொள்ளை பிரியமாம்.

அன்பான கணவன்,பாசமான பிள்ளைகள் என மன மகிழ்ச்சியுடன் வாழ்வதாய்