அனைவரும் சாப்பிட வேண்டிய காய் சுண்டக்காய் ஏன் தெரியுமா??

1611

அனைவரும் சாப்பிட வேண்டிய காய் சுண்டக்காய் ஏன் தெரியுமா??

சுண்டைக்காய் அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் பயன்கள் ஏராளம். சுண்டைக்காய் கசப்புத்தன்மை உடையது.இதில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

* சுண்டைக்காயில் கசப்புச் சுவை இருப்பதால் இது நாம் உண்ணும் உணவை எளிதில் ஜீரணிக்கிறது. நாம் உண்ணும் உணவில் நமக்கே தெரியாமல் சில கிருமிகள் இருக்கும். அந்தக் கிருமிகளை அழித்து வயிற்றை சுத்தப்படுத்துகிறது.

* இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.இரத்தக் குழய்களில் கொழுப்பு படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு.

* வெள்ளை இரத்த அணுக்களை அதிகப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

* பசித்தபின் புசி என நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். பசி உணர்வு ஏற்படுவதற்கு இந்த சுண்டைக்காய் உதவியாக இருக்கிறது.

* சுண்டைக்காயில் ரிபோஃப்ளேவின் தையமின் உள்ளன. இவை பல் சொத்தை மற்றும் வாய்ப்புண் ஏற்படுவதையும் தடுக்கிறது.

* கடுமையான வயிற்றுப் போக்கு இருப்பவர்கள் சுண்டைக்காய், மாதுளம் பிஞ்சு, சுக்கு, ஓமம் இவற்றை தூள் செய்து மோருடன் சாப்பிட சீதபேதி, வயிற்றுப்போக்கு சரியாகும்.

* ஞாபக சக்தி அதிகரிக்கவும், கண் பார்வையை அதிகரிக்கவும் இது உதவுகிறது.

* சிலருக்கு எளிதில் ஜீரணம் ஆகாத உணவுகளை இரவு நேரத்தில் உண்பதால் அஜீரணம் ஏற்படுகிறது. இதற்கும் சுண்டைக்காய் வற்றலை தூள் செய்து மோரில் கலந்து குடிக்கலாம்.

* பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க சுண்டைக் காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

* மூல நோயை சரிசெய்யவும் பயன்படுகிறது.

* மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.

* நெஞ்சு சளி இருப்பவர்கள் சுண்டைக் காயை பிஞ்சாக இருக்கும் போது சமைத்து சாப்பிட்டு வந்தால் சளித் தொல்லை சரியாகும்.

* சுண்டைக்காயில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் வயதாகும் காலத்தில் சுண்டைக்காயை அடிக்கடி சேர்த்து வந்தால் எலும்புப் பிரச்சனைகளை சரி செய்யும்.

* கபம், காசநோய், ஆஸ்துமா, இருமல் மற்றும் சளித்தொல்லை இருப்பவர்கள் சுண்டைக்காய் வற்றலை நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிடலாம்.

* சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வதினால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து கட்டுக்குள் வைத்திருக்கும்.

* சிறுநீரகப் பிரச்சனையை சரிசெய்வதோடு மட்டுமல்லாமல் கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துகிறது.

* சுண்டைக்காயை காய வைத்து பொடி செய்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் ஆசனவாயில் ஏற்படும் நோய் தொற்றும், அரிப்பும் சரியாகும்.