கொரோனா பாதிப்பு 83 – பேரிடராக அறிவித்த இந்தியா!

412

இந்தியாவில் கொரோனாவால் 83பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நோயை பேரிடராக அறிவித்துள்ளது.

இந்தியாவில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நோயால் இருவர் இறந்துள்ள நிலையில், மத்திய அரசு இந்நோயை பேரிடர் என்ற அறிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட நபர்களின் மருத்துவ செலவுகள் குறித்து மாநில அரசே நிர்ணயிக்கும் என்று மத்திய அரசின் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.