பெற்றோரை எதிர்த்து திருமணம்!.. தமிழனை கரம்பிடித்த வெளிநாட்டு அழகி

2762

பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை காதலித்து கரம்பிடித்துள்ளார் சிவகங்கையை சேர்ந்த நிர்வின்.

மானாமதுரையை சேர்ந்த தம்பதி கோபால்- வசந்தா, இவர்களது மூத்த மகன் நிர்வின்.

பொறியியல் முடித்து விட்டு சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார், அங்கு பிலிப்பைன்சை சேர்ந்த மேரிஜேன் அல்புரோ என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்தது.

மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், பெண் வீட்டார் இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனினும் நிர்வின் குடும்பத்தில் பச்சைக்கொடி காட்டவே, திருப்பரங்குன்றத்தில் இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.

மணமகளின் தோழிகள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்ட நிலையில் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

விரைவில் பெற்றோரின் சம்மதத்தை பெற்று ஆசிர்வாதம் வாங்கிவிடுவோம் என மணமகள் உறுதியுடன் பேசியுள்ளார்.

எல்லை, மொழி கடந்து நடந்த காதல் திருமணத்துக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.