நடிகர் ரமேஷ் கண்ணாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? விஜயோடு நடித்தவர் இவரது மகனா..? அழகிய குடும்ப புகைப்படம் இதோ..!

890

தமிழ்த்திரையுலகில் தன் நகைச்சுவைகளின் மூலம் அனைவரிடமும் நன்கு அறிமுகம் ஆனவர் ரமேஷ் கண்ணா. அஜித்தின் அமர்க்களம் படம் தொடங்கி, வீரம் படத்தில் கலெக்டராக வந்ததுவரை அதிக படங்களில் அவரோடு நடித்து இருக்கிறார். அதேபோல் விஜயோடு ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் இவர் செய்யும் காமெடிக்கு இன்றும் விழுந்து, விழுந்து சிரிப்பவர்கள் உண்டு.

தமிழின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் சேர்ந்து காமெடியில் கலக்கி இருக்கிறார் ரமேஷ் கண்ணா. நடிகர் ரமேஷ் கண்ணாவுக்கு திருமண வயதில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் மூத்தவர் ஐஸ்வந்த் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருக்கிறார்.

பெரும்பாலும் தான் இயக்கும் படங்களில் எல்லாம் ஒரு காட்சியிலாவது தலைகாட்டிவிடும் இயக்குனர் முருகதாஸ் அதன்படியே தன் உதவி இயக்குனர்களையும் தலைகாட்ட வைக்கிறார். அப்படித்தான் சர்க்கார் படத்தில் விஜயோடு, நடிகர் ரமேஷ்கண்ணாவின் மகனும் ஒருகாட்சியில் வந்திருக்கிறார்.