கணவர் சமைத்த உணவை வாயில் வைத்த மனைவி.. தலைதெறிக்க ஒடிய கொடுமை! அதிர்ச்சியில் பொலிசார்

289

இந்தியாவில் மனைவிக்காக சடலத்தின் உடல் பாகத்தை சமைத்து கொடுத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவரின் மனைவி மளிகைக் கடைக்கு பொருட்களை வாங்கச் சென்றுள்ளார்.

கடைக்குச் சென்று மிகவும் சோர்வாக வந்த பெண், குடிபோதையில் இருந்த கணவர் சமைப்பதை அவதானித்துள்ளார். பின்பு அவருடன் சாப்பிடவும் அமர்ந்துள்ளார்.

கணவர் சமைத்திருந்த அசைவ உணவை வாயில் வைத்த சில நொடியிலேயே அந்தப் பெண் வாந்தி எடுத்துள்ளார். அதன் பின்பு அந்த உணவை என்னவென்று பார்த்தபோது தான் அது சடலத்தின் கை என்பது தெரியவந்துள்ளது.

இதனை அவதானித்த அதிர்ந்து போன பெண் தலைதெறிக்க வெளியே ஓடியதுடன் அக்கம்பக்கத்தினரிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார்.

பின்பு தகவலறிந்த பொலிசார் வந்து கணவரை விசாரணை செய்ததில், மதுபோதையில் இருந்த அவர் கங்கை கரைக்கு சென்று அங்கு எரிக்கப்பட்ட பிணங்களிலிருந்து வேகாத கை ஒன்றை வீட்டுக்கு எடுத்து வந்து சமைத்ததாக கூறியதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனதுடன், குறித்த நபரைக் கைது பொலிசார் கைது செய்துள்ளனர்.