மகனின் கொடுமை தாங்காமல் வீட்டிலிருந்து தானாக வெளியேறிய பெற்றோர்! கண்கலங்க வைக்கும் பின்னணி

1086

இந்தியாவில் மகன் அடித்து தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் வயதான தந்தை வீட்டை விட்டு வெளியேறிய சம்பவத்தின் பின்னணி கண்கலங்க வைத்துள்ளது.

ஒடிசா மாநிலத்தின் Jagatsinghpurஐ சேர்ந்தவர் பிரதன் (85). இவர் தனது மனைவி, மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.

பிரதன் மகனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் வேலை எதற்கும் செல்லாத பிரதனின் மகன் தனது தந்தைக்கு வரும் பென்ஷன் பணத்தை அவரிடம் இருந்து பிடிங்கி கொண்டு தினமும் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் தந்தை பிரதன், தாய் மற்றும் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

அவரின் துன்புறுத்தலை தாங்க முடியாத தாய் மற்றும் மனைவி வீட்டை விட்டு சிறிது காலத்துக்கு முன்னர் வெளியேறினர்.

ஆனால் பிரதன் மட்டும் மகன் மீது கொண்ட பாசத்தால் அவரின் கொடுமைகளை பொறுத்து கொண்டிருந்தார்.

ஆனால் நாளுக்கு நாள் கொடுமை அதிகரித்ததால் பிரதனும் சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தங்க தொடங்கினார்.

பிரதனின் பரிதாப நிலையை கண்ட பொலிசார் அவரிடம் விசாரித்த போதே அனைத்து உண்மைகளும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் பிரதனின் மகனிடம் விசாரிக்கவுள்ளனர்.