சுடுகாட்டில் இருந்து வேட்டியை போர்த்தியபடி வீட்டுக்கு வந்த 12 வயது சிறுமி! தாயிடம் அழுது கொண்டே சொன்ன தகவல்

4046

தமிழகத்தில் சுடுகாட்டில் சிறுமி கூட்டுபலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. அவரது வீட்டில் கழிவறை வசதி இல்லை. கடந்த 6ம் திகதி இரவு 7 மணிக்கு பாலாற்று கரையோரம் இயற்கை உபாதை கழிப்பதற்காக சிறுமி சென்றார்.

அப்போது அங்கு சுடுகாட்டுப் பகுதியில் மூன்று பேர் குடித்துவிட்டு சீட்டாடிக் கொண்டிருப்பதை பார்த்த சிறுமி வேறு பக்கமாக போக பார்த்திருக்கிறார். ஆனால் அந்த மூன்று பேரும் சிறுமியைத் துரத்திப் பிடித்து மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர் பின்னர் உடைந்த பீர் பாட்டிலை காட்டி, சத்தம் போட்டால் குத்திக் கொன்று விடுவோம் என்று மிரட்டி மூவரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

ஆடைகளை அப்படியே விட்டால் சிறுமி வெளியே போய் சொல்லி விடுவாளோ என்று முன்னெச்சரிக்கையில். அவரின் உடைகளை கந்தல் கந்தலாக கிழித்து போட்டு விட்டு ஓடிவிட்டனர் மூவரும்.

ஆடை இல்லாமல் வெளியே வர கூச்சப்பட்ட சிறுமி மானத்தை மறைக்க அங்கே வேறு ஏதாவது கிடைக்குமா என்று தேடி பார்த்திருக்கிறார். சுடுகாட்டில் சடலங்களுக்கு சடங்குகளுக்காக மேலே போர்த்தப்படும் வேட்டி ஒன்று அழுக்கான நிலையில் கிடந்த நிலையில் அதை போர்த்திக்கொண்டு வீட்டுக்கு ஓடி வந்திருக்கிறார். நடந்த சம்பவங்களை தன் தாயிடம் விவரித்து சிறுமி அழுதிருக்கிறார்.

பதறிப்போன சிறுமியின் தாயார் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு மகளை அழைத்துச் சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துவிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இதையடுத்து பொலிசார் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சந்துரு, பார்த்திபன், கண்ணன் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.

இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.