ராகு கேது பெயர்ச்சி 2020 : இந்த 4 ராசிக்கும் கோடி கோடியாக பணம் கிடைக்கப் போகிறதாம்! தனுசு ராசிக்காரர்களே நீங்கதான் ராஜா ராஜாதி ராஜா

1885

ராகு கேதுகளுக்கு ஓவ்வொரு நாளிலும் தனியாக ஓன்றறை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த காலத்தை ராகுகாலம் எமகண்டம் என்று கூறுவார்கள். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6,11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை.

ராகு கேதுவுக்கு 3,7,11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

இனி ரிஷபத்தில் சஞ்சரிக்கப் போகும் ராகுவினாலும் விருச்சிகத்தில் சஞ்சரிக்கப் போகும் கேதுவினாலும் தனுசு, மகரம், கும்பம் மீனம் ராசிக்காரர்களில் யாருக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே ராகு பகவான் இப்போது உங்க ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஆவணி மாதம் முதல் ஆறாம் வீட்டிற்கு வரப்போகிறார். உங்க ராசியில் இப்போது இருக்கும் கேது பகவான் உங்க ராசிக்கு 12 ஆம் வீடான விரைய ஸ்தானத்திற்கு செல்கிறார்.

ஆறாம் வீடு ருண ரோக சத்ரு ஸ்தானம் உங்க தொழில் முயற்சிகள் கை கூடும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். வெளிநாட்டு தொடர்புடைய வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வருமானம் கூடும் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

உங்களின் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் கை கூடி வரும், புத்திரசம்பத்து கிடைக்கும். 12ஆம் வீடான மோட்ச ஸ்தானத்தில் மோட்சகாரகன் கேது வருவதால் புது முயற்சிகள் கை கூடும். வரவு எட்டணா செலவு பத்தணா நிலை மாறி சேமிப்புகள் உயரும்.

சுப தேவைகளுக்கு கடன் வாங்குவீர்கள். நீண்ட நாள் கடன்களும் அடைபடும். வண்டி வாகன மாற்றமும் வீடு மாற்றமும் ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு குடி போகும் யோகம் வரும். மொத்தத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி யோகம் செல்வாக்கு சொத்து சுகத்தை கொடுக்கும்.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு ராகு 6ஆம் வீடாண ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் இருக்கிறார். ஆவணி மாதம் முதல் ராகு 5ம் இடத்திற்கு செல்கிறார். அதே போல 12ஆம் வீட்டில் இருக்கும் கேது லாப ஸ்தானமான 11ம் இடத்திற்கும் வருகின்றனர். ஐந்தாம் இடம் என்பது புத்திரபாக்கியம்,தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் உல்லாசம் கேளிக்கை கதை கவிதைகளில் ஆர்வம் இவை அனைத்தும் 5ஆம் இடத்தின் காரகத்துவங்கள்.

11ஆம் இடம் என்பது லாபம் மூத்த சகோதரம், எண்ணங்கள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கும். 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.

ஏற்கனவே ராகு இருந்த இடம் நல்ல இடமாக இருந்தாலும் 12ஆம் வீட்டில் இருந்த கேது உங்களுடைய தூக்கத்தை கெடுத்தார். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு நிம்மதியை தரும். கேது லாப ஸ்தானத்திற்கு வருவதால் தொட்டது துலங்கும்.

தேவையற்ற செலவுகள்கள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். இது வரை தடைபட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். திருமணம் ஆகி புத்திரபாக்கியம் தடைப்பட்ட தம்பதியினருக்கு புத்திரபாக்கியமும் குடும்பத்தில் அமைதியும் நிலவும். திருமணம் ஆகி விவாகரத்து நடந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். சொத்துகள் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களே இதுநாள் வரைக்கும் உங்க ராசிக்கு 5ம் இடத்திலும்,11ம் இடத்திலும் இருந்த ராகு,கேது. இப்பொழுது சுகஸ்தானமான 4ஆம் இடத்திற்கு ராகுவும் தொழில் ஸ்தானமான10இடத்திற்கு கேதுவும் மாறுகிறார்கள். ஏற்கனவே இருந்த இடம் யோகமான இடம்தான்.

ஆனால் சில தடைகள் தாமதங்கள் ஏற்பட்டு வந்தது நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சிக்குப் பின்னர் பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். 4ம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ஆம் பாவத்திற்க்கு ராகு வருகிறார்.

கேந்திரத்தில் பாவ கிரகங்கள் வருவதால் இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம். பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார் ராகு. வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள்,வருமானம் அனுகூலம் ஆதாயத்தை தரும். சிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். பழைய கடன்கள் அடைப்படும்.

நோய் நொடி தொல்லைகள் நீங்கும். கடனுக்கு வட்டி கட்டிய நேரம் மாறி வரவுகள் சேமிப்பாக உயரும். பத்தில் ஒரு பாவி இருக்க வேண்டும் என்பார்கள். பத்தாம் இடம் என்பது தொழில், மாமியார் வீடு, உத்தியோகம் வேலை வாய்ப்பு ஆகிய ஸ்தானங்களுக்கு கேது வருகிறார். லாப ஸ்தானத்தில் இருந்து யோகத்தை செய்த கேது இப்பொழதும் யோககாரனாக செயல்பட்டு யோகபலனை வாரி வழங்குவார். தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில் நிலை முன்னேற்றத்தை தரும். வசதி வாய்ப்புகள் கூடும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களே ராகு பகவான் இப்போது நான்காம் வீட்டில் இருக்கிறார். இனி ராகு பகவான் 3ஆம் வீட்டிற்கு மாறப்போகிறார். கேது பகவான் பத்தாம் வீட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கும் மாறப்போகின்றனர். இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார்.

“ராகு பதினொன்று,முன்று,ஆறாம் இடத்திற்கு சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாகும். காரியங்களுண்டாம்,அன்னதானங்களுண்டாம்.வாகு மதி மணமுண்டாம்,வரத்து மேல் வரத்துண்டாம்” என்ற ஜோதிட பாடல் படி ராகு இப்பொழது யோகத்தை வழங்க போகிறார்.

புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும். மோட்சத்தை தரக்கூடிய கேது பகவான் 9ஆம் வீட்டிற்கு வருவதால் நடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். பெற்றோர்களுக்கு புகழ் பெருமை கிடைக்கும். சிலருக்கு பாக பிரிவினை, தந்தை வழி சொத்துகள் கிடைக்கும்.