இந்த 5 ராசியையும் காதலிக்கிறது உங்க வாழ்க்கையை இருமடங்கு அழகாக்குமாம்! கோவக்கார சிம்மம் கிடைத்தால் இப்படி ஒரு லக்கியா?

877

காதல் என்று வரும்போது ஒவ்வொருவரும் தங்களுக்கென தனிவழி வைத்திருப்பார்கள்.

சிலர் காதலில் தங்களின் தேவைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள், சிலர் தங்கள் காதல் துணையின் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் மகிழ்ச்சியையே தங்களின் இலட்சியமாக வைத்திருப்பார்கள்.

இதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாகவும் இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களை காதலிப்பது உங்களுக்கு வசதியானது என்று பார்க்கலாம்.

சிம்மம்
உக்கிரமா இருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் நம்பிக்கையான பார்வை மற்றும் அச்சமற்ற தன்மைக்கு புகழ் பெற்றவர்கள். வெளிப்படையான குணம் கொண்ட இவர்கள் காதலிக்கும்போது வெளியே செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஒவ்வொரு முறையும் வெளியே செல்லும்போதும் அது சிறப்பான ஒன்றாக இருக்க தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள். அழகான உடை, செல்ல வேண்டிய இடம் என அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருப்பார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்கள் அதேசமயம் காதலில் புதிய பரிசோதனைகளை செய்ய விரும்புவார்கள். அடிப்படையில் பிடிவாத குணம் கொண்ட இவர்கள் முற்றிலும் திட்டமிடாத டேட்டிங் செல்வதில் ஆர்வம் காட்டுவார்கள். சமூகத்துடன் இணைந்திருப்பதில் இவர்கள் எப்போதும் ஆர்வம் காட்டுவார்கள் அதற்கு காரணம் அவர்களின் நட்பான குணம்தான். புதியவர்களுடன் பழகுவதற்கு இவர்கள் ஒருபோதும் தயங்குவதில்லை.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அடிக்கடி வெளியே செல்லும் பழக்கம் கொண்டவர்கள் மற்றும் சிறந்த தகவல் தொடர்பு திறன் கொண்டவர்கள். புதிய உறவுகளை உருவாக்குவதையும், உற்சாகமானவர்களுடன் உரையாடுவதையும் அவர்கள் விரும்புகிறார்கள். உண்மையில், அவர்கள் சமூக பட்டாம்பூச்சிகளாக இருக்க விரும்புவார்கள். இவர்களை காதலிப்பது திருப்பங்கள் நிறைந்த மலையோர பயணம் போல சுவாரஸ்யமானதாக இருக்கும்.

மேஷம்
மேஷ ராசியைச் சேர்ந்தவர்கள் இயற்கையாகவே மிகவும் கவர்ச்சியானவர்கள் மற்றும் பொதுவாக தங்கள் மனதில் பட்டதை பேசக்கூடியவர்கள். அவர்கள் ஒருவரை விரும்பினால், பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் அந்த கணத்தை வாழ முயற்சிப்பார்கள். அவர்கள் தைரியமான மற்றும் தன்னிச்சையான ஆளுமைக்கு பெயர் பெற்றவர்கள் மற்றும் வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வார்கள். இவர்களுடனான காதல் புதிய அனுபவமாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் பொதுவாக தனிமையில் இருப்பதை விரும்புவதில்லை, எனவே காதலருடன் வெளியே செல்ல இவர்கள் ஒருபோதும் தயங்குவதில்லை. அவர்கள் திறந்த மனதுடன், வெளியில் நேரத்தை செலவிடுவதை விரும்புகிறார்கள். தங்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது இவர்கள் தங்கள் காதலரின் உதவியையும், ஆலோசனையையும் நாடுவார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பொதுவாக ஒரு நபருடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள தங்கள் நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் ஒருமுறை அவர்களை நம்பி விட்டால் அந்த உறவை மேலும் நெருக்கமாக்க அனைத்து வழிகளிலும் முயற்சிப்பார்கள். இவர்கள் சமூகத்தில் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள், ஆனால் இவர்களுக்கு பிடித்தவர்களுடன் மட்டும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சமூகத்துடன் இணைந்திருப்பதை விரும்புகிறார்கள், இவர்கள் தங்கள் துணைக்கு எப்பொழுதும் அனைத்திலும் சமமான முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே இவர்களுடன் காதலில் இருக்கும்போது அவர்களின் துணை தங்களின் சுயமரியாதையை இழக்கும் நிலை ஒருபோதும் ஏற்படாது.