இதை படித்தபின் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை பயன்படுத்த மாட்டீங்க!

684

பெரும்பாலான நகரங்களில் பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து விற்கப்படும் குடிநீரை நம்பித்தான் மக்கள் பலர் உள்ளனர்.

இன்றைய காலக்கட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் கேன்கள் ஆகியவற்றில் அடைத்து விற்கப்படும் குடிநீரை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் அருந்துவது இப்போது நாகரீக கலாச்சாரமாகவும் மாறிவிட்டது.

தற்போது வெளியாகியுள்ள ஒரு ஆய்வின்படி பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது அமெரிக்காவில் உள்ள ஆர்ப்மீடியா என்ற பத்திரிகையாளர் அமைப்பும், நியூயார்க் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தியது.

இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள 11 முன்னணி நிறுவனங்களின் 250 பிளாஸ்டிக் பாட்டில் ஆய்வுக்கு எடுத்து அவற்றை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வானது பாட்டிலில் உள்ள தண்ணீரை மிகவும் நுண்ணிய வடிகட்டியில் வடிகட்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அதாவது 0.0015 மில்லி மீட்டர் அளவு துவாரம் கொண்ட மிக மெல்லிய வடிகட்டி மூலம் வடித்தெடுத்து அதில் தேங்கியுள்ள நுண் பொருட்களை ஆராய்ந்தனர்.

அதில் ஏராளமான பிளாஸ்டிக் மற்றும் ரசாயன துகள்கள் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அறிவியல் மொழியில் சொல்வதானால் அதில் நைலான், பாலித்தீன், டெரபதலேட் மற்றும் பாலிபுரோப்லின் ஆகிய துகள்கள் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரில் இருந்துள்ளன.

மனிதர்களான நமக்கு இந்த துகள்களை செரிமானம் செய்யும் சக்தி நமது உடலுக்கு கிடையாது. இதனால் இந்த துகள்கள் குடல்வழியாக நமது ரத்த குழாய்க்குள் சென்று ஒவ்வொரு உறுப்புகளிலும் தேங்குகிறது.

இதன் காரணமாக ஈரல், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்படும், மேலும் பல்வேறு பாதிப்புகளையும் நம் உடலில் அவை ஏற்படுத்தும்.

எனவே பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை அத்தியாவசியமாக கருதாமல் அவசர தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.