இந்தக் கொடியின் பெயர் தெரியுமா? இது எத்தனை பெரிய வியாதிகளை குணப்படுத்தும் தெரியுமா?

721

ஆயுர்வேதத்தில் நாள்பட்ட இருமல், ஆஸ்துமா மட்டுமல்லாமல் ஆஸ்துமா தொடர்பான அறிகுறிகள் இருந்தாலும் அதையும் நிவர்த்தி செய்வதற்கு சீந்தில் கொடி பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு ஆயுர்வேத நூல்களில் அம்ரிதா, சின்னரூஹா, மதுபானி, தந்திரிகா, குண்டலினி என்று பல பெயர் உண்டு.

சீந்தில் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாகிப் பயன்தரக் கூடிய குணம் கொண்டது . செரிமானமின்மை, வலி, சோர்வு ஆகியவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது.

தாது விருத்தியை உண்டாக்கக் கூடியது. விட்டு விட்டு வரும் காய்ச்சலைத் தீர்க்கக் கூடியது.

வீக்கத்தைக் கரைக்கக் கூடியது. மூட்டு வலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடியது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கக் கூடியது.

கல்லீரளுக்குப் பலத்தைக் கூடியது. உடல் தேற்றியாக விளங்கக் கூடியது. காம உணர்ச்சியைத் தூண்டக் கூடியது.

சீந்தில் கொடி மூலிகையை ஒவ்வாமை எதிர்ப்புக்கு பயன்படுத்தலாம். ஆயுர்வேதத்தில் அம்ருதவல்லியை அஜீரணம் மற்றும் வயிறு வீக்கத்திற்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்.

வயிற்றுப் பிரச்சனைகளை வேரறுக்கக் கூடியது என எண்ணற்ற மருத்துவப் பலன்களைக் கொண்டது இந்த சீந்தில் கொடி.

சீந்தில் கொடியின் டீ நீர் வாத சுரத்தையும், பித்த சுரத்தையும் தணிக்கும் வல்லமை கொண்டது. சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மாவு (சீந்தில் சர்க்கரை) வயிற்றில் சேர்கிற அமிலத் தன்மையினைப் போக்கும் தன்மை கொண்டது.

வயிற்றுப் போக்கை வற்றச் செய்து விடும். சீத பேதியை குணப்படுத்தி விடும். ஆயுர்வேத மருத்துவ நூல்கள், உலர்ந்த சீந்திலையை மஞ்சள் காமாலையை சரிசெய்யவும், இரத்த சோகையைப் போக்கவும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கவும், சரும நோய்களை குணமாக்கவும் பரிந்துரை செய்கிறது.