இந்த உணவுகளை மட்டும் அதிகளவு சாப்பிட்டு விடாதீங்க… சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தையே பாதிக்குமாம்!

570

நமது உடலில் உள்ள தேவையற்ற நச்சு பொருட்களை வெளியேற்றும் முக்கியமான பணியை சிறுநீரகம் செய்கிறது.

இது ஒழுங்காக செயல்படாவிட்டால் உடலில் நச்சுக்கள் தேங்கி அவை பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

சிறுநீரகம் சிறப்பாக செயல்பட நமது உணவு முறை மிகவும் முக்கியமானது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலோனர் ஆரோக்கியமற்ற உணவுகளை தான் தேடி தேடி உண்ணுகின்றனர்.

இதனால் பல ஆரோக்கிய பிரச்சினைளும் ஏற்படுகின்றன. குறிப்பாக சிறுநீரக பிரச்சினை.

நாம் ஆரோக்கியமேன எடுத்து கொள்ளும் சில உணவுகளே நம்முடைய சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் அவகேடோ பழத்தை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரகத்தில் அடைப்பை உண்டாக்கும்.

அடைக்கப்பட்ட உணவுகளான சூப், காய்கறிகளில் அதிகளவு சோடியம் மற்றும் உப்பு இருக்கும். எனவே சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புபவர்கள் இதனை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

பழுப்பு அரிசியில் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அதிகளவு உள்ளது. சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது கண்டிப்பாக சிறுநீரக பிரச்சினையை ஏற்படுத்தும். ஏனெனில் இதில் சோடியம் குறைந்தளவு இருந்தாலும் பொட்டாசியம் 422மிகி உள்ளது.

பொதுவாகவே பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் அதிகளவு உப்பு மற்றும் உலர்தன்மை இருக்கும். இதில் உள்ள குறைவான சோடியம் மற்றும் அதிகளவு புரோட்டின் சிறுநீரக கற்களை உருவாக்கும்.

உருளைக்கிழங்கை தண்ணீரில் நனைக்கும்போது அதில் உள்ள பொட்டாசியம் அளவு குறைகிறது. உருளைக்கிழங்கை சிறியதாக நறுக்கி வேகவைக்கும்போது அதிலுள்ள பொட்டாசியத்தின் அளவு பாதியாக குறைகிறது. இருந்தாலும் அதிகளவு உருளைக்கிழங்கு சிறுநீரகத்திற்கு ஆபத்துதான்.

சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் தக்காளியை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் இதில் உள்ள பொட்டாசியத்தின் அளவு உங்கள் சிறுநீரக கற்களை மட்டும் உருவாக்காமல் மற்ற சில சிறுநீரக பிரச்னைகளையும் உருவாக்க்கூடும்.

அதிகளவு உலர்பழங்கள் எடுத்துகொள்ளுமுன் சற்று யோசிக்கவும். குறிப்பாக பேரிட்சை பழம் அதிகமாக சாப்பிடாதீர்கள்.