நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவங்களின் செயல்பாட்டிற்காக ரூ.50 லட்சம் நிதியுதவு அளித்துள்ளார்.
சென்னை ஊரடங்கு காலத்தில் ஏழைகள், தொழிலாளா்கள், வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்களுக்கு அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் வளசரவாக்கம் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் உள்ள அம்மா உணவகங்களின் செயல்பாட்டுக்காக நடிகா் ராகவா லாரன்ஸ் ரூ.50 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.
இதற்கான காசோலையை அவரது சார்பில் சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சி.ராஜசேகா் சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷிடம் திங்கள்கிழமை வழங்கினார்.
இதற்காக அவருக்கு நன்றி கூறி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்பே ராகவா லாரன்ஸ் பல கோடி ரூபாய்க்கு உதவி தொகை அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் மூன்று கோடி ருபாய் உதவியை அறிவித்தார் லாரன்ஸ். அதில் மத்திய அரசுக்கு 50 லட்சம், தமிழக அரசுக்கு 50 லட்சம், FEFSI அமைப்புக்கு 50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு 50 லட்சம், மாற்று திறனாளிகளுக்கு 25 லட்சம், அவரது பிறப்பிடமான சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள தின கூலி வேலை செய்பவர்களுக்கு 75 லட்சம் என பிரித்து வழங்கினார்.
அது மட்டுமில்லாமல், தனது அடுத்த பட சம்பளத்தில் இருந்து 25 லட்சம் ரூபாயை நேரடியாக தூய்மை பணியாளர்களுக்கு கொடுத்துவிடும்படி தயாரிப்பாளரிடம் அவர் கூறியுள்ளார்.
#COVID19 தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களிலுள்ள அம்மா உணவகங்களின் செயல்பாட்டிற்காக சென்னை மாநகராட்சி ஆணையரிடம் ரூ. 50 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ள நடிகர் திரு. ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு நன்றி.@chennaicorp @offl_Lawrence pic.twitter.com/A0EkaFDfRA
— SP Velumani (@SPVelumanicbe) April 20, 2020