வழுக்கை தலையில் முடிவளர சூப்பர் டிப்ஸ் இதோ

635

இயற்கையான முறையில் முடி அடர்த்தியாக வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பயன்படுத்தி கொள்ளவும்.

கடுகு எண்ணெயில் நெல்லிக்காயை ஊற வைத்து தலைக்குத் தேய்த்து வந்தால் தலைமுடி வளரும்.

சாதம் வடித்த நீருடன் சிகைக்காய் பவுடரைக் கலந்து தேய்த்து வாரம் இரண்டுநாள் குளித்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

ஆலிவ் எண்ணெய் சிறிது சூடாக்கி தினசரி தேய்த்து 6 மணி நேரம் கழித்துக் குளித்தால் முடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

சப்பாத்திக் கள்ளிப் பூவை மையாக அரைத்து தேய்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி தலையில் தடவிவந்தால் முடி அடர்த்தியாக வளருவதுடன் முடி கொட்டுதல் நிற்கும்.

ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் மூன்று ஸ்பூன் தேயிலையைக் கலந்து சூடாக்கி பின் தைலப் பதத்திற்கு இறக்கிவிடவும் பிறகு இதனை தினசரி தலையில் தடவி வர முடி கருமையாக செழித்து வளரும்.

வேப்பம்பூவை அடுப்பில் சிறிது வதக்கி கசக்கி இளஞ்சூட்டுடன் உச்சந்தலையில் தேய்த்துவந்தால் முடி தாரளமாக வளரும்.

முசுமுசுக்கை இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக காய்ச்சி அடுப்பிலிருந்து இறக்கி வைத்துக் கொள்ளவும். இதனை வாரம் ஒரு நாள் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை விலகுவதோடு வழுக்கை விழுவதையும் தடுக்கும்.

எண்ணெய்க்குளியிலும் முடி வளர உதவும். பிறந்த 6 மாதம் முதல் ஒரு வயது குழந்தைகளுக்கு வாரத்தில் 2 நாள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டலாம். முதல்முறை தேய்ங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டினால் பயத்தம்மாவும் அடுத்தமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டினால் கடலைமாவும் தேய்த்து குளிப்பாட்டி வந்தால் தலைமுடி வளரும்.

கறிவேப்பிலையுடன் சின்னவெங்காயம் சேர்த்து அரைத்து தயிர் கலந்து தலைக்குத் தேய்த்து குளித்துவந்தால் முடி உதிர்தல் நிற்பதோடு முடி வளரச் செய்யும்.

வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தினமும் தலைக்குக் குளித்து வந்தால் முடி கொட்டுதல் நிற்கும்.

கீழாநெல்லிச் செடியின் வேரை தேய்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி சூடு ஆறியதும் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு அதை தலைக்குத் தேய்த்து வந்தால் நாளடைவில் வழுக்கைத் தலையில் முடி வளரும்.

வாழைப்பழத்தை மசித்து எலுமிச்சப்பழச்சாறு முட்டையின் மஞ்சள் கரு சேர்த்துத் தடவி ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை வாரம் ஒருநாள் செய்துவந்தால் பலன் கிடைக்கும்.

தலையில் வழுக்கை ஏற்பட்ட இடத்தில் வெங்காய் அல்லது வெள்ளைப்பூண்டை தேய்த்து வருவதன் மூலம் காலப்போக்கில் பலன் கிடைக்கும்.

செப்பருத்திப்பூவில் இருந்து சாறு எடுத்து முடி உதிரிந்து சொட்டையாகியுள்ள இடத்தில் தேய்த்துவந்தால் தலைமுடி வளரும்.