மனிதராக இருந்தால் இ றக்கதான் போகிறோம்! கொ ரோனாவால் உ யிரிழப்பவர்க ளுக்காக விஜயகாந்த் நெகிழ வைக்கும் முடிவு

461

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய தன்னுடைய கல்லூரியின் ஒரு பாகத்தை எடுத்துக்கொள்ளும்படி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த உலகில் பிறந்த யாராக இருந்தாலும் ஒருநாள் இறக்கதான் போகிறோம்.

இப்படி இருக்கையில், மருத்துவ துறையை தேர்ந்தெடுத்து மக்களுக்கு சேவை செய்யும் மருத்துவர்களுக்கே இந்த நிலை என்றால், சாதாரண மனிதர்களுக்கு எந்த நிலை ஏற்படும் என்று எண்ணி பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் கால்நடைகளையே உரிய மரியாதையுடன் தான் அடக்கம் செய்கிறோம். இந்நிலையில், மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தது வேதனை அளிக்கிறது.

மக்கள் தவாறக புரிந்து கொண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து நொறுக்குவது. ஓட்டுநர்களை தாக்குவது கண்டனத்துக்குரியது. மக்கள் அனைவரும் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டு இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாதென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலம், உடலை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை எடுத்துக்கொள்ளலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்”. என்று குறிப்பிட்டு அந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

அந்த கல்லூரி தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.