கொ ரோனா நிவாரண நிதியை வாங்க சென்ற ஏழை ஊழியர்! திடீரென பெரும் கோடீஸ்வரர் ஆனது எப்படி? முழு பின்னணி

3197

அமெரிக்காவில் ஏழை நபர் ஒருவருக்கு கொரோனா நிவாரண நிதி வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில் ஏ.டி.எம்-க்கு சென்ற போது அவருக்கு பல கோடிகள் வங்கிக்கணக்கில் இருப்பதாக காட்டப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

சிகாகோவில் உள்ள தீயணைப்பு துறையில் பணிபுரிபவர் சார்லஸ் கேல்வின் (45).

இவருக்கு சமீபத்தில் கொரோனா நிவாரண நிதியாக சிறிய அளவிலான பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டதாக மெசேஜ் வந்தது.

இதையடுத்து ஏ.டி.எம்-க்கு சென்று வீட்டு வாடகை கொடுப்பதற்காக அதில் ஒரு பகுதி பணத்தை எடுத்தார்.

பின்னர் மீதி பணம் $8 மில்லியன் இருப்பதாக ரசீது வந்ததை பார்த்து சார்லஸ் அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஒருசேர அடைந்தார். தான் எப்படி இவ்வளவு பெரிய கோடீஸ்வரன் ஆனேன் என குழம்பி போனார்.

இதையடுத்து அங்கிருந்த பெட்ரோல் நிறுவன பெண் ஊழியரிடம் ரசீதை காட்டினார். அதை பார்த்த ஊழியர், நீங்கள் பெரிய கோடீஸ்வரரா என கேட்டார்.

அதற்கு சார்லஸ், நான் ஏழை, கோடீஸ்வரனாக இருந்தால் ஏன் வாடகை பணம் கொடுக்க சிரமப்படுகிறேன் என கூறினார்.

பின்னர் வங்கியில் எதாவது தவறு நடந்திருக்கலாம் என கருதி போன் செய்தார்.

அப்போது வங்கி அதிகாரி, உங்கள் வங்கிக்கணக்கில் வெறும் $13.69 பணம் தான் உள்ளது என கூறினார்.

அதன்பின்னர் தான் ஏ.டி.எம் இயந்திரம் ரசீதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் அவருக்கு அவ்வளவு பெரிய பணம் இருப்பதாக காட்டியது தெரிய்வந்தது.

இது குறித்து சார்லஸ் கூறுகையில், சில மணி நேரம் நான் கோடீஸ்வரனாக இருந்த உணர்வு இருந்தது. என் வங்கிக்கணக்கிலா இவ்வளவு பணம் உள்ளது என அதிர்ந்தேன், பின்னர் தான் உண்மை தெரிந்தது.

ஆனால் அதே சமயம் அவ்வளவு பணம் என்னுடய வங்கிக்கணக்கில் இருந்திருக்கலாம் என விரும்புகிறேன் என கூறியுள்ளார்.