உங்களுக்கு வயதாகி விட்டது! வெளிக்காட்டும் அறிகுறிகள் இதுதான்

344

பொதுவாக ஒரு சிலர் வயதான நபரை போன்றும், ஒரு சிலர் வயது குறைவான நபரை போன்றும் தோற்றமளிப்பார்கள்.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மரபியல் காரணிகளை விட வெளிப்புற காரணிகளின் காரணமாக வயதின் தோற்றம் அதிகரித்துக் காட்டப்படுவதாக நம்புகிறார்கள்.

இதில் கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் மூலம் ஒருவருக்கு இயல்பை விட வயதாகிக் கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மிகவும் உலர்ந்த மற்றும் சீரற்ற தோல்
வயது முதிர்ச்சியின் அறிகுறிகள் வழக்கமாக 25 வயதிற்கு பின் தோன்றும், ஆனால் சில எதிர்மறையான காரணிகளால் அவை அதற்கு முன்பும் கூட தோன்றலாம்.

உங்களுடைய சருமம் நிரந்தரமாக உலர்ந்தும் செதில் செதிலாக உதிர்ந்து கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்களோடு காணப்படும்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சமநிலையற்ற உணவு, சன்ஸ்கிரீன் புறக்கணிப்பு, அதிக அளவு மன அழுத்தம் ஆகிய காரணங்கள் கூட தோல் புதுப்பித்தல் செயல்முறை மெதுவாக்கும்.

உங்கள் உணவில் காய்கறிகள், இலை கீரைகள், பெர்ரி, மற்றும் பருப்புகள், தாவர எண்ணெய்கள், மற்றும் விதைகள் போன்ற நிறைவுற்ற கொழுப்புகளில் நிறைந்த உணவுகள் சீரானதாக இருக்குமாறு தேர்வு செய்து உண்ண வேண்டும்.

கண்களை சுற்றி வரும் கருவளையம்
செல்கள் வயதாவதற்கான முதல் அறிகுறிகள் இந்தக் கண்கள் உள்ள பகுதியில்தான் தோன்றுகிறது. சீரான தூக்கம் இல்லாமை, மனச்சோர்வு, புற ஊதாக் கதிர்களின் பாதிப்பு போன்ற பல காரணங்களால் கண்களை சுற்றி கருவளையம், மற்றும் கண் இரைப்பைகள் வீங்குதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

கண்களை சுற்றி தசைகள் தொடர்ந்து வேலை செய்வதால் இதுபோன்ற தோல் நெகிழ்வுக்கு வழி வகுக்கிறது.

இந்தப் பிரச்னை வயதானவர்களுக்கு வந்து விட்டால் தவிர்க்க முடியாது, ஆனால் 40 வயதுக்கு முன் வந்துவிட்டால் தடுக்க முயற்சிகள் செய்ய வேண்டும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி
ஒரு பெண்ணிற்கு 46-54 வயதில் மெனோபாஸ் தொடங்குகிறது என்றால் அது சாதாரணமாக கருதப்படுகிறது.

உங்களுக்கு 40 வயதிற்கு முன்பே நடந்தால், இது உள் உறுப்புகளின் முன்கூட்டிய முதிர்ச்சியின் அடையாளம் ஆகும்.

ஆரம்பகால மெனோபாஸின் அறிகுறிகள் தூக்கமின்மை, காய்ச்சல், குளிர், வலிப்புத்தாக்கங்கள், மற்றும் ஒருநிலையற்ற மனநிலை ஆகியவையாகும்.

முதல் அறிகுறிகளை நீங்கள் கவனிக்கும்போது,கருப்பை சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவரை அணுகுவது நல்லது.

உடல் பலவீனம்
மாடிப்படி ஏறுகையில் , நடைபயிற்சி அல்லது வேறு எந்த தினசரி நடவடிக்கைகளாலும் மிகுந்த சிரமத்திற்குள்ளானால், இது உங்கள் அதிகாரப்பூர்வ மற்றும் உயிரியல் வயதில் ஏற்படும் வித்தியாசங்களை குறிக்கிறது.

40 ஆண்டுகளுக்கு பிறகு, தசையின் அடர்த்தி குறையத் தொடங்குகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதை சரிசெய்ய முடியும்.

அன்றாட வாழ்வில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். யோகா, நடனம், மிதிவண்டி, போன்ற உங்கள் விருப்பத்திற்குரிய ஏதாவது ஒரு பயிற்சியை நீங்கள் செய்து வாருங்கள்.

முடிந்தவரை லிப்ட் போன்றவைகளை பயன்படுத்தாமல் மாடிப்படி ஏறுவது, பேருந்துகளைத் தவிர்த்து நடப்பது போன்றவைகளை செய்வதால் இந்தக் குறைபாடுகளை போக்க முடியும்.

கவனிக்கத்தக்க முடி உதிர்தல்
ஒரு நாளுக்கு 50-125 முடி இழப்பு ஆரோக்கியமான வயது வந்தவர்களுக்கு சாதாரணமாக கருதப்படுகிறது.

உங்கள் முடி இழப்பு அதிகமானால், மருத்துவரை அணுக வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஹார்மோன் பிரச்சினைகளின் காரணமாக இது தோன்றும்.

குறிப்பிடத்தக்க முடி இழப்பு உடலின் பிற பகுதிகளில் காணப்படும். இதற்கு காரணம் விரைவாக நம் செல்களுக்கு வயதாகி கொண்டு இருக்கிறது என்பதுதான்.

சுகாதாரமான உணவுகளை உட்கொள்ளுதல், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த பொருட்கள் மூலமும் சூரியக் கதிர்களில் இருந்து முடியை பாதுகாத்துக் கொள்வதன் மூலமும் இதனை சரிசெய்யலாம்.

தூக்கமின்மை
சரியான தூக்கம் இல்லாத போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் நம் தோற்றத்தை களையிழக்க செய்கிறது.

இது உடலில் சுரக்கும் கார்டிசோல் அளவின் காரணமாக நடக்கிறது, இது தூக்கத்தின் போது பதட்ட உணர்வை ஏற்படுத்தும்.

பெரும்பாலும் 60 வயதிற்கு மேல் தான் இது குறையத் தொடங்கும் என்றாலும் சரியான வழக்கை முறை தூக்க முறை போன்றவை காரணமாகவும் இவை நடக்கிறது.

யோகா, தியானம் மற்றும் நீச்சல் ஆகியவை நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கும். உறங்குமுன் டிவி பார்ப்பது அல்லது மொபைலை பயன்படுத்துவது போன்ற விஷயங்கள் தவிர்த்து புத்தகம் படிப்பதன் மூலம் மனமும் மூளையும் சமநிலை அடைந்து நல்ல உறக்கம் கிடைக்கும்.