இதை படித்தால் எலுமிச்சை தோலை தூக்கி போட மாட்டீங்க!

401

எலுமிச்சை பழத்தில் சத்துக்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் அதன் தோலிலும் உடலுக்கு நன்மை பயக்கும் சத்துக்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

நம் முன்னோர்கள் கூட எலுமிச்சைப்பழங்களை தோலுடன் சிறுதுண்டுகளாக வெட்டி, உப்புநீரில் ஊறவைத்து வெயிலில் நன்கு காய்ந்தபின், உணவுக்கு தொட்டு சாப்பிடுவார்கள்.

இதன்மூலம், எலுமிச்சையின் முழுச்சத்தும் அவர்களுக்குக் கிடைத்து ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறு சாப்பிட பிடிக்காதவர்கள், எலுமிச்சை தோல் பொடி, எலுமிச்சை தோல் டீ அல்லது எலுமிச்சை துருவல் போன்று எடுத்துக் கொள்ளலாம்.

இதன் மற்ற பலன்கள்
  • எலுமிச்சை பழத்தை விட அதன் தோலில் விட்டமின் சி சத்துக்கள் அதிகம், இது பற்களின் பல்வேறு பாதிப்புகளை சரிசெய்வதோடு வாயின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
  • எலுமிச்சை தோல்களை நாம் முறையாக உட்கொள்ளும்போது, இவற்றிலுள்ள சிட்ரஸ் பயோஃபிளாவனாய்டுகள் கெட்டநச்சுக்களை உடலிலிருந்து விரட்டி, உடலாற்றலை மேம்படுத்தும்.
  • உடலின் மெட்டபாலிசத்தை முறைப்படுத்தி உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது.
  • இதிலுள்ள பொட்டாசியம் உடலின் இரத்த அழுத்தத்தை சரியான விகிதத்தில் வைக்கிறது.
  • பெக்டின் என்னும் வேதிப்பொருட்கள் உடல் எடையை குறைப்பதில் சிறப்பான பங்காற்றுகின்றன.