தேனிலவு முடிந்து வந்த பின்னர் மனைவியின் ஸ்கேன் அறிக்கையை பார்த்து அழுத கணவன்! நடந்ததை விளக்கிய புதுப்பெண்

1321

அயர்லாந்தை சேர்ந்த புதுமணத்தம்பதி தேனிலவுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிய உடனேயே புதுப்பெண்ணுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதோடு, அவர் கணவருக்கு புற்றுநோய் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Katie Woods (27) என்ற இளம்பெண்ணுக்கும் Joseph (30) என்பவருக்கும் கடந்தாண்டு திருமணமான நிலையில் இருவரும் தேனிலவுக்கு சென்றார்.

தேனிலவு முடிந்து ஊருக்கு திரும்பியவுடன் அடுத்தநாள் தனது பணிக்கு Katie கிளம்பி கொண்டிருந்தார்.

குளித்து முடித்தவுடன் தலை முடியை துண்டால் Katie துவட்டிய போது திடீரென கைகளை தூக்க முடியாமல் திணறினார்.

பின்னர் கணவருக்கு போன் செய்த போது தனது நிலைமையை கூட அவரால் எடுத்து கூறமுடியவில்லை. இதையடுத்து தனது தாய் Rose-க்கு போன் செய்த Katie திணறியபடி தனது நிலையை கூறினார்.

இதன்பின்னர் Rose அங்கு உடனடியாக வந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

இதன்பின்னர் நடந்தவற்றை Katie கூறுகிறார். மருத்துவமனையில் எனக்கு பக்கவாதம் ஏற்பட்டிருக்காது, பயப்படாதீர்கள் என கூறினார்கள்.

ஆனால் எனக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் எனக்கு பக்கவாதம் ஏற்பட்டதோடு இதயத்துக்கு அருகில் ஓட்டை இருப்பதும் தெரிந்தது.

ஸ்கேன் அறிக்கையை பார்த்த என் கணவர் அழுதார். இதயத்துக்கு ஆக்சிஜன் சரியாக செல்லாத காரணத்தாலேயே பக்கவாதம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

இதற்கான தொடர் சிகிச்சையை எடுத்து வந்து நோயில் இருந்து மீண்டு வருகிறேன்.

இதனிடையில் என் கணவருக்கு நிணநீர்ப்புற்றுநோய் திடீரென ஏற்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சையை அவர் எடுத்து வருகிறார்.

பல தம்பதிகள் தங்களின் 50 வருட திருமண வாழ்க்கையில் கூட இவ்வளவு போராட்டத்தை சந்தித்திருக்க மாட்டார்கள்.

ஆனால் நாங்கள் திருமணமான குறுகிய காலத்தில் இவ்வளவு உடல் பிரச்சனைகளை சந்தித்துள்ளோம், ஆனாலும் நாங்கள் தைரியமாகவே உள்ளோம் என கூறியுள்ளார்.