இது எங்க ஏரியா… கொ ரோனாவால் சாலைக்கு வந்த சிங்கங்கள்!

683

கொரோனா கட்டுப்பாடுகளால் நாடுகள் முடங்கிவிட்டதால், உயிரியல் பூங்காக்களுக்கு செல்ல ஆளில்லை.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவின் Kruger தேசிய பூங்காவுக்கு பார்வையாளர்கள் யாரும் வராததால், சிங்கங்கள் பூங்காவின் நடுவிலுள்ள சாலை முழுவதையும் ஆக்கிரமித்து படுத்துக்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

பொதுவாக, சிங்கங்கள் குளிர் மிகுந்த குளிர்காலத்தில்தான் சாலைக்கு வந்து படுத்துக்கொள்ளும்.

பகல் நேர வெப்பத்தை சாலை ஈர்த்து வைத்திருக்கும் என்பதால், அந்த வெப்பத்திற்காக இரவில் பூங்காவின் நடுவிலுள்ள சாலையில் வந்து அவை படுத்துக்கொள்ளும்.

தற்போது ஆட்கள் யாரும் வருவதில்லை என்பதால், அவை சாலை முழுவதையும் ஆக்கிரமித்து படுத்துக்கொண்டுள்ளன.