நெஞ்சு சளியால் கஷ்டப்படுபவர்களுக்கு இதோ இயற்கை வைத்தியம்!

552

சளின்னு சொன்னதும் அட ச்சீ… என்னடா என சில பேர் முகத்தை சுளிப்பார்கள்.

சளி அறுவறுத்தக்க ஒன்றா, சளியால் எதாவது பயன் இருக்கா, சளி ஏன் மனித உடலுக்கு ஏற்படுகிறது என்பதை விரிவாக பார்ப்போம்.

சளி மனிதன் உடலுக்கு வருவது ஒரு வகை நன்மையே. நமது உடலின் அதிக சூட்டை சமாளிக்கவும் தேவையற்ற நச்சுப் பொருட்களைத் தடுக்கவும் உடல் தனது தேவைக்காக உருவாக்கிக் கொள்வதே சளி எனும் நீர் மூலகத் திரட்சி.

சளி இயல்பாக வெளியேறினால் நன்மைதான். ஆனால் நமது அறியாமையால் பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் உடல் இயற்கைக்கு எதிராக செயல்படும்போது இந்த சளி அளவு அதிகமாகும். இதனால் இயல்பாக வெளியேற்றும் வழிகள் தடுக்கப்படுவதால் சளி கட்டிபட்டு போகிறது.

உடல் அதை வெளியேற்ற கடுமையாக முயற்சிகள் எடுக்க வேண்டி இருக்கிறது. கட்டிப்போன சளியை வெளியேற்றும் முயற்சியின் விளைவே, இருமல், தும்மல், ஈளை, இளைப்பு என பல துன்பங்களுக்கு நாம் ஆளாக வேண்டியுள்ளது.

கடைகளில் விற்கும் மருந்துகள் சாப்பிட்டால் சளி போய் உடல் சீராக இருக்கும் என்று நினைக்கிறீர்களா. அது முற்றிலும் தவறு.

மருந்துகள் உடலின் வெளியேற்றும் ஆற்றலை தடுத்து அழித்து விடுகிறது மேலும் உடலைச் சூடாக்கி சளி உற்பத்தியை இன்னும் அதிகப்படுத்துகிறது.

சளி பிரச்சினைகள் உள்ளவர்கள் மருந்துகள் சாப்பிட்டதும் சளியை வெளியேற்றும் போது ஏற்பட்ட துன்பம் தெரியாத நிலையில் சிறிது காலம் தொல்லை இல்லாது இருக்கின்றனர்.

ஆனால், இதற்காக பயன்படுத்தப் பட்ட மருந்துகளினால் ஏற்பட்ட விளைவுகள் புதிய நோய்களுக்கு வித்திடும். மருந்துகள் உருவாக்கிய சூட்டால் அதிகரிக்கும் சளியால் நோயின் தன்மை இன்னும் மோசமடையும்.

இதனால் இயற்கை முறையில் எப்போதும் சளி பிரச்சினைக்கு நிவாரணம் காண்பது தான் நல்லது.

ஆனால் இயற்கை முறையில் சளி பிரச்சினைக்கு குடிக்கும் கசாயம் குடிக்கும்போது கொஞ்சம் கசப்பாக, கஷ்டமாக இருக்கும். ஆனால் அந்த கசப்பை சகித்துக்கொண்டு குடித்தால் நம் உடலில் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

இயற்கை வைத்தியம்

  • நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவி வந்தால் சளி குணமாகும்.

  • தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி சரியாகும்.
  • தொண்டை கரகரப்புக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு சீக்கிரம் சரியாகும்.
  • மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இரும்பல் நீர்க்கோவை ஆகியவை முற்றிலும் சரியாகும்.
  • சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இரும்பல் குணமாகும்.
  • நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இரும்பல் ஓடிவிடும். நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்றால் அதன் ரசத்தை பருகினால் இரும்பல் சரியாகும்.
  • சித்தரத்தையைச் சிறிதளவு எடுத்துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் ஆகியவை குணமாகும்.
  • பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.
  • இஞ்சி சாறு, துளசிச் சாறு, தேன் மூன்றையும் சம அளவில் கலந்து குடித்தால் சளி, இருமல் மற்றும் நெஞ்சில் கபம் சேருதல் குணமாகும்.

  • இளம் சூடு பதத்தில் உள்ள நீரில் 2 தேக் கரண்டி சுக்கு தூளுடன் 1/4 தேக் கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக் கரண்டி தேன் கலந்து பருகினால் சளி குணமாகும்.
  • 2 மேசை கரண்டி இஞ்சி சாற்றில் 2 தேக் கரண்டி தேன் கலந்து தினமும் 4 வேளை எடுத்துக்கொண்டால். நெஞ்சு சளியை உடனே போகும்.
  • 1 தேக் கரண்டி தேன் மற்றும் 2 மேசை கரண்டி எலுமிச்சை சாற்றை வெது வெதுப்பான நீரில் கலந்து 5 வேளை குடித்தால் சளி பிரச்சினை இருக்காது.
  • சீரகத்தை நன்கு பொடி செய்து தேனுடன் தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால் சளி இரும்பல் போகும்.