சமூக விலகளை பின்பற்றாமல் இளம் ஜோடியின் முகம் சு ழிக்க வைக்கும் செயல் ! அ பராதம் விதித்த பொ லிசார்: சிக்கிய வீடியோ

824

சிங்கப்பூரில் இளம் ஜோடி சமூக விலகல்களை பின்பற்றாமல் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில், பொலிசார் இருவருக்கும் தல 300 டொலர் அபராதம் விதித்தனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிங்கப்பூரில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை Upper Boon Keng சாலையில் உள்ள இடத்தில் இளம் வயது ஜோடி சமூக விலகல்களை பின்பற்றால் அருகில் அமர்ந்திருந்ததோடு, ஒருவருக்கு ஒருவர் முத்தம் கொடுத்தபடி இருந்துள்ளனர்.

இதனால் குறித்த பகுதிக்கு சென்ற பொலிசார், விதிகளை பின்பற்றாததன் காரணமாக அபராதம் விதித்தனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், கடந்த செவ்வாய்(ஏப்ரல் 14-ஆம் திகதி) காலை உள்ளூர் நேரப்படி சரியாக 8.38 மணிக்கு தொடர்ந்து கட்டுப்பாட்டு அறைக்கு தொலைப்பேசி அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது.

அதில் பேசியவர்கள் அனைவரும் Upper Boon Keng சாலையின் Block 8A-வில் இருக்கும் இடம் ஒன்றில், இளம் வயது ஜோடி சமூகவிலகல்களை பின்பற்றாமல் இருப்பதாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து சரியாக 9.10 மணிக்கு அங்கு சென்ற போது, 20 வயது மதிக்கத்தக்க ஆணும், 19 வயது மதிக்கத்தக்க பெண்ணும் அங்கிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கொரோனா தடுப்பு சட்டம் 2020-இன் கீழ் பாதுகாப்பான தூர நடவடிக்கைகளை மீறியதற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் 300 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதன்பிறகு அந்த பகுதியை விட்டு வெளியேறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்