சித்திரை மாத ராசிப்பலன்கள் 2020 : எதிர்பாராத அதிர்ஷ்டமும் தனவரவும் பெற போகும் ராசிக்காரர்கள் யார்?

724

பிறந்திருக்கும் சித்திரை மாதம் 12 ராசிக்காரர்களும் எப்படி இருக்க போகுது என்று பார்ப்பாம்.

மேஷம்

எதிலும் முன் வைத்த காலை பின் வைக்காத மேஷ ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 10 ல் உச்சம் குரு மற்றும் சனி பகவானுடன் இணைந்து இருப்பதால் எதிலும் போராடி வெல்வீர்கள்.

உங்கள் திறமை வெளிப்படும். ஆளுமை திறன் அதிகரிக்கும். இருப்பினும் வாகன பயணங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.

பொருளாதார நிலை உயரும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் திருவினையாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. தாய் மற்றும் உறவுகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.

பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பங்கு சந்தையில் லாபம் உண்டாகும். காதல் வெற்றியடையும். எதிரிகளால் ஆதாயம் உண்டு.

எதிர்பாராத அதிர்ஷ்டமும், தனவரவும் உண்டாகும். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் வழியில் ஆதாயம் உண்டு. எதிர்பாராத தடைகளும், பிரச்னைகளும் வந்தாலும் அனைத்தையும் தாண்டி முன்னேறுவீர்கள். தந்தை உடல் நிலையில் கவனம் தேவை.

தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

தொழில் மற்றும் உத்தியோகத்தில் சிறு, சிறு பிரச்னைகளை சந்தித்தாலும் அதனை எதிர் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். ஆளுமைத்திறன் வெளிப்படும். திடீர் மாற்றங்களும், உயர்வுகளும் ஏற்படும். தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றுவீர்கள்.

நண்பர்களால் ஆதாயம் உண்டு. உங்கள் முயற்சிகள் வெற்றியடைய கடினமாக போராடுவீர்கள். தொழில் மற்றும் உத்தியோக விஷயமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உணர்ச்சி வசப்படுவதை தவிர்த்தால் இம்மாதம் இன்பமாக அமையும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஏப்ரல் 15,16,17,18,19. மே 04,05,06.

சந்திராஷ்டம நாட்கள்: மே 08, 09.

ரிஷபம்

மனித நேயமும், மற்றவர்களுக்கு உதவும் குணமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சுக்கிர பகவான் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால் மிகுந்த ஏற்றமான காலமாகும். உங்கள் தவறுகளை திருத்தி கொண்டு முன்னேறுவீர்கள்.

விழிப்புணர்வும், செயல் திறனும் அதிகரிக்கும். தீர்க்க முடியாத பிரச்னைகளையும் எளிதில் தீர்க்க வழி பிறக்கும். உங்கள் ஆளுமை திறன் அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உண்டாகும்.

உங்கள் திறமை வெளிப்படும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் அதிகரிக்கும். அவர்கள் உங்கள் வாழ்வின் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் செயல்களால் மற்றவர்களை எளிதில் கவருவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

குடும்ப விஷயங்களில் சிறு, சிறு பிரச்னைகள் இருந்தாலும் பிற் பகுதியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் அதிகரிக்கும். இருப்பினும் பேச்சில் கவனம் தேவை. முயற்சிகளில் சிறு, சிறு தடை வந்தாலும் அனைத்தையும் சமாளித்து முன்னேறுவீர்கள். சகோதர, சகோதரிகளிடம் கவனம் தேவை. வெளியூர் பயணங்களில் எச்சரிக்கையுடன் இருங்கள்.

வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். தாய் மற்றும் உறவுகளால் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். தாய்க்கு மருத்துவ செலவுகள் உண்டு. குழந்தைகளால் மனக்கசப்புகள் இருந்தாலும் மகிழ்ச்சி உண்டு. பூர்வீக சொத்து விஷயங்களில் பிரச்னைகள் வந்து நீங்கும். பங்கு சந்தையில் முதலில் இழப்பு ஏற்பட்டு பிறகு லாபம் கிடைக்கும்.

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. எதிர்பாராத அதிர்ஷ்டமும் தனவரவும் உண்டாகும். இழந்த விஷயங்கள் திரும்ப கிடைக்கும்.தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். நண்பர்களிடம் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஏப்ரல் 17,18,19, 20,21,22 மே 06,07,08.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 14, மே 10,11,12.

மிதுனம்

எந்த நிலையிலும் தந்திரத்தால் வெல்லும் மிதுன ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் புதன் பகவான் உங்கள் ராசிக்கு 10 ல் நீசம் பெற்றாலும், நீசம பங்க ராஜயோகத்தில் கிரக நிலை இருப்பதால் முதலில் எதிலும் சிறு, சிறு தடைகள், பிரச்னைகள் இருந்தாலும், சிறிது, சிறிதாக அனைத்திலும் நல்ல மாற்றம் ஏற்படும்.

உடல் நிலை ஆரோக்கியம் பெறும். எந்த சூழ்நிலையிலும் பொறுமையையும், விழிப்புணர்வையும் கடைபிடிப்பதால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்த்து வெற்றி பெறலாம். நேர்மறை சிந்தனை வாழ்வில் உயர்வை தரும் என்பதை உணரும் காலம் இதுவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டு. வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.எடுக்கும் முயற்சிகளில் தடை இருந்தாலும் மன உறுதியுடன் செயல்பட்டு காரியத்தை முடிப்பீர்கள்.

விடா முயற்சி வெற்றி தரும். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. தாய் உடல் நிலையில் கவனம் தேவை. வீடு மற்றும் வாகன பராமரிப்பு செலவுகள் வந்து நீங்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு.

அவர்களின் அத்தியாவசிய தேவையை நிறைவேற்றுவீர்கள். பங்கு சந்தையில் விரயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவிக்குள் சிறு கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாகன பயணங்களில் கவனம் தேவை.

நீண்ட தூர பயணம் மற்றும் இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முடிவுகளையும், புதிய முயற்சிகளையும் தவிர்ப்பது நல்லது. வீண்பிரச்னைகளில் தலையிட வேண்டாம். தொழில் மற்றும் உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சுய ரூபத்தை புரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஏப்ரல் 20,21,22,23,24. மே 08, 09.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 15,16,17. மே 12,13.

கடகம்

மற்றவர் நலனுக்காக முடிந்த அளவு தியாக உணர்வுடன் செயல்படும் கடக ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சந்திர பகவான் உங்கள் ராசிக்கு 6 ல் சஞ்சரிப்பதால் எத்தனை பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வழக்கு விஷயங்கள் சாதகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். எடுக்கும்முயற்சிகளில் சிறு, சிறு தடைகள் வந்தாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம். சகோதர, சகோதரிகளிடையே சிறு மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். தாய் மற்றும் உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறுவார்கள்.

வீட்டின் வசதி வாய்ப்புக்களை மேம்படுத்துவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். குழந்தைகளால் சிறு கஷ்டங்கள் வந்தாலும் மகிழ்ச்சி உண்டு. பங்கு சந்தையில் கவனம் தேவை.

இறைவழிபாட்டில் அதிக கவனம் செலுத்துங்கள். எதிரிகளால் இருந்த பிரச்னைகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும்.

கணவன் மனைவிக்குள் சிறு, சிறு பிரச்னைகள் வந்தாலும், நல்ல மாற்றமும், புரிந்துணர்வும் உண்டாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் உண்டு. கூட்டாளிகள் உறுதுணையாக இருப்பார்கள். இருப்பினும் முழுமையாக நம்ப வேண்டாம்.

தந்தை உடல் நிலையில் கவனம் தேவை. எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. தெய்வ அனுகூலம் அதிகரிக்கும்.தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். மதிப்பு, மரியாதை உயரும். நீண்ட நாள் பிரச்னைகள் முடிவுக்கு வரும். இதுவரை இருந்த தடைகள் விலகும். புதிய மாற்றங்கள் ஏற்படும். மகிழ்ச்சியான சூழல் உருவாகும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஏப்ரல் 22,23,24,25,26,27. மே 10,11,12.

சந்திராஷ்டம நாட்கள்:ஏப்ரல் 17,18,19.

சிம்மம்

கம்பீரமும், அதிகார தோரணையும் இயற்கையிலே அமைந்த சிம்ம ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 8 ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனம் தேவை.

எடுக்கும் முயற்சிகளில் சிறு, சிறு தடை பிரச்னைகள் வந்தாலும், விடா முயற்சியுடன் செயல்படுங்கள்.

உங்கள் பேச்சால் மற்றவர்களைக் கவருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் நிலவும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். உடன் பிறப்புக்கள் உதவிகரமாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

விடாமுயற்சியே வெற்றி தரும் என்பதை உணரும் காலம். புதிய தங்க நகை ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். வீடு, வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். தாய் மற்றும் உறவினர்களால் சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனம் தொடர்பான ஆவணங்களை சரியாக வைத்து கொள்ளுங்கள். குழந்தைகளால் சிறு, சிறு பிரச்னை வந்தாலும் கவலை கொள்ளத் தேவையில்லை.

பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும்.

நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான சூழல் உருவாகும். தம்பதியருக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். மனைவி வழியில் பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு.

புதிய ஒப்பந்தங்கள் நன்மை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டமும், தனவரவும் உண்டாகும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிதுர் வழி சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும். தெய்வ அனுகூலம் உண்டு. தொழில் மற்றும் உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச் 18, 19, 20, 29, 30, 31 ஏப்ரல்01, 02.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 23, 24, 25.

கன்னி

எதிலும் புதுமையை புகுத்தி, வாழ்வை எளிதாக வாழ்வதில் ஆர்வமுடைய கன்னி ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் புத பகவான் உங்கள் ராசிக்கு 7-ல் நீசம் பெற்றாலும், பொதுவாக கிரக நிலைப்படி கிரகங்கள் நீச பங்க ராஜயோகம் பெறுவதாலும், முதலில் சிறு தடைகளையும் பிரச்னைகளையும் சந்தித்தாலும் மாத பிற்பகுதி அனைத்தும் நலமாக இருக்கும். இருப்பினும் எதிலும் விழிப்புணர்வுடனும், பொறுமையுடன் செயல்படுங்கள்.

குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். புதிய நபர்களால் நன்மை உண்டு. உங்கள் பேச்சால் அனைவரையும் வசீகரிப்பீர்கள். பெரியோரின் ஆசியும், தெய்வ அனுகூலமும் உண்டு. அதிர்ஷ்ட தேவதை உங்களை தேடி வருவாள். முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டு.

குழந்தைகளால் சிறு பிரச்னை இருந்தாலும் நன்மை உண்டு. வீடு, வாகன விஷயங்களில் கவனம் தேவை. தாயுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். தாய் மற்றும் உறவுகளிடையே மன கசப்புக்கள் வந்து நீங்கும். பங்கு சந்தையில் குறைந்த கால முதலீடுகளால் லாபம் பெறலாம். காதல் வெற்றியடையும்.

பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். தெய்வ அனுகூலமும், அதிர்ஷ்டமும் உண்டு. கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரித்து, இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. புதிய ஒப்பந்தங்களால் சாதகமான பலன்கள் ஏற்படும்.

எதிர்பாராத அதிர்ஷ்டமும், தன லாபமும் உண்டு. தொழில் மற்றும் உத்தியோகத்தில் சிறு, சிறு பிரச்னைகள் இருந்தாலும் நல்ல முன்னேற்றம் உண்டு. நண்பர்களால் ஆதாயம் உண்டு. தந்தை வழியில் முழு ஒத்துழைப்பும், ஆதாயமும் உண்டு. ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஏப்ரல் 17,18,19, 27,28,29, 30 மே 01,02.

சந்திராஷ்டம நாட்கள்:ஏப்ரல் 22, 23,24.

துலாம்

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கையுடைய துலா ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு 8 ல் இருந்தாலும், அவரின் சொந்த வீட்டில் ஆட்சி நிலையில் இருப்பது நன்மையே, வாழ்வில் எதிர்பாராத அதிர்ஷ்டமும், முன்னேற்றமும் இருந்தாலும் சிறு, சிறு பிரச்சினைகளையும், தடைகளையும் சந்திப்பீர்கள்.

உங்கள் திறமை வெளிப்படும். பேச்சில் கோபத்தை தவிர்க்கவும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் சிறு பிரச்னைகள் வந்தாலும் மகிழ்ச்சி உண்டு.

எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரித்து உற்சாகமாக செயல்படுவீர்கள். உடன் பிறப்புகள் உதவிகரமாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர மற்றும் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தாய் உடல்நிலையில் பாதிப்பு வந்து நீங்கும்.

உறவுகளால் மனஸ்தாபங்கள் உருவாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பங்கு சந்தை முதலீடுகளை தவிர்க்கவும். எதிரிகளால் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன் மனைவிக்கு கருத்து மோதல்கள் வந்தாலும் முடிவில் நலமே விளையும்.

வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் எச்சரிக்கை தேவை. புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. அரசு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. எதிர்பாராத அதிர்ஷ்டமும், தன வரவும் உண்டு.

பண புழக்கம் அதிகரிக்கும். தந்தை உடல் நலனில் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் அதிக கவனம் தேவை.

இடமாற்றங்களும், வெளியூர் பயணங்களும் உண்டு. உயரதிகாரி மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள். வீடு மற்றும் வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். மருத்துவ செலவுகள் உண்டு என்பதால் சிக்கனம் தேவை.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஏப்ரல் 20,21,22, 29,30. மே 01,02,03,04.

சந்திராஷ்டம நாட்கள்:ஏப்ரல் 25, 26, 27.

விருச்சிகம்

இவ்வுலகின் இரகசியங்களை கண்டுணரும் திறன் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 3 ல் உச்சமாக சஞ்சரிப்பதால் மனதில் தன்னம்பிக்கை , தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். எந்த விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள்.

விடா முயற்சியே வெற்றியை தரும் என்பது உணரும் காலம். பேச்சில் கவனம் தேவை. பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வு வந்து நீங்கும். குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.

கோபத்தையும், அவசர புத்தியையும் தவிர்க்கவும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். தாய் மற்றும் உறவுகளால் ஆதாயம் உண்டு. குழந்தைகள் விஷயத்தில் கவனம் தேவை. பங்கு சந்தை முதலீடுகளை தவிர்க்கவும். எதிரிகளால் சிறு பிரச்னைகள் வந்தாலும் இறுதி வெற்றி உங்களுக்கே.

உத்தியோகத்தில் சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். மனைவி வழி உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் லாபம் தரும்.தந்தை வழி ஆதரவு உண்டு.

எதிர்பார்த்த இடத்திலிருந்து தேவையான பண உதவிகள் கிடைக்கும். தொழில் முலம் சிறு பிரச்னைகள் இருந்தாலும் வளர்ச்சி உண்டு. தொழில் மேம்பாட்டுக்கான வங்கி கடன் முயற்சி சாதகமாக அமையும். நண்பர்கள் வழியில் தேவையான உதவிகள் கிடைக்கும்.

முக்கிய நபர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். வீட்டின் வசதியை மேம்படுத்த செலவுகள் செய்வீர்கள். புதிய ஆபரணங்கள் வாங்குவீர்கள். தடையை தாண்டி வெற்றி பெறும் மாதம் இந்த மாதம்.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஏப்ரல் 22,23,24 மே 02,03,04,05,06.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 27,28,29.

தனுசு

உயர்ந்த குறிக்கோளும், உறுதியான மனமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் குருபகவான் உங்கள் ராசிக்கு 2 ல் நீச பங்க ராஜயோகம் பெற்று சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த குழப்பநிலை மாறி மனதில் ஒரு தெளிவு ஏற்படும். தடைகள் விலகி முன்னேறுவீர்கள். வாழ்வின் அடுத்த நிலைக்கு செல்வதை பற்றிய சிந்தனை மேலோங்கும்.

பேச்சில் வசீகரம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவுகளிடையே மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளிடையே பிரச்னைகள் இருந்தாலும் நன்மை உண்டு. வெளியூர் பயணங்களால் கவனம் தேவை.

தாய் மற்றும் உறவுகளால் நன்மை விளையும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை ஏற்படும்.

குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பங்கு சந்தை நிலை சாதாரணமாக இருக்கும். எதிரிகளால் பிரச்னைகள் வந்து நீங்கும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பனிச்சுமை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் நன்மை உண்டு. புதிய ஒப்பந்தங்கள் லாபம் தரும். வீண் மனக்கவலை, தாழ்வு மனப்பான்மையை தவிர்ப்பது நல்லது. தந்தையால் அனுகூலம் உண்டு.

பிதுர் வழி சொத்து விஷயங்கள் லாபமாக இருக்கும். தெய்வ அனுகூலம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் ஆதரவு உண்டு. நல்ல அதிர்ஷ்டமும், பெரியோரின் ஆசியும் கிடைக்கும். தொழிலில் சிறு, சிறு பிரச்னை இருந்தாலும், மாத பிற்பகுதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களிடம் கவனம் தேவை. முயற்சிகள் தாமதமானலும் வெற்றி உண்டு. வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் நிறைவேறும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஏப்ரல் 25,26,27. மே 04,05,06,07,08.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 29,30. மே 01.

மகரம்

எந்த கடினமான வேலையையும் எளிதில் வெற்றிகரமாக கையாளும் மகர ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சனி பகவான் உங்கள் ராசியிலே சஞ்சரிப்பதால் எந்த சூழ்நிலையையும் சமாளித்தாலும் செவ்வாய், குரு சேர்க்கையால் சில பிரச்னைகளையும், தேவையற்ற விரயங்களையும் சந்திப்பீர்கள். அவசர முடிவுகளையும், வீண் கோபத்தையும் தவிர்க்கவும். நிதானமுடன் செயல்படுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வு வந்து நீங்கும். எடுக்கும் முயற்சிகளில் உழைப்புக்கேற்ற உயர்வு உண்டு. உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும். தாய் மற்றும் உறவுகளால் மன கசப்புகள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டு. வாகன பயணங்களில் கவனம் தேவை. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும். நல்ல அதிர்ஷ்டமும், இறையருளும் உண்டு. புத்தி கூர்மை அதிகரிக்கும். கல்வியில் மாணவர்கள் சாதனை செய்வார்கள். எதிரிகள் விலகி செல்வார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளதால், ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. தந்தை உடல் நலனில் கவனம் தேவை . மாத பிற்பகுதியில் தந்தையால் அனுகூலம் உண்டு. படிப்பு மற்றும் வேலைக்காக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும்.

தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். உங்கள் திறமை வெளிப்படும். உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஏப்ரல் 27,28,29. மே 06,07,08,09.

சந்திராஷ்டம நாட்கள்: மே02,03,04.

கும்பம்

எத்தனை தோல்விகள் வந்தாலும் துவளாமல் வெற்றி நடை போடும் கும்ப ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சனி பகவான் உங்கள் ராசிக்கு 12 ல் குரு, செவ்வாயுடன் சஞ்சரிப்பதால் எதிலும் விழிப்புடன் செயல்பட வேண்டிய காலம். தேவையற்ற பிரச்னைகள், இழப்புகள் ஏற்படும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டும்.

பணம், கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பேச்சில் கவனம் தேவை. பொருளாதார நிலையில் முடக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் சிக்கனமாக இருப்பது நல்லது. குடும்ப விவகாரங்களில் விழிப்புடன் செயல்படுங்கள். சகோதர, சகோதரிகளால் இழப்புகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் உருவாகும்.

எதிலும் பொறுமை, விழிப்புணர்வு தேவை. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். தாயின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாய் வழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறுவார்கள். குழந்தைகளால் சிறு, சிறு பிரச்னை இருந்தாலும் பின்பு நன்மை ஏற்படும். பங்கு சந்தையில் சிறிது சிறிதாக லாபம் அதிகரிக்கும். பூர்வீகசொத்துக்கால் லாபம் உண்டு. கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களால் லாபம் உண்டு.

எதிர்பாராத அதிர்ஷ்டமும், தன வரவும் உண்டு. தந்தையின் அன்பும், ஆதரவும் உண்டு. ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பெரியோரின் ஆசி கிட்டும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் அதிக கவனம் தேவை.தொழில் விஷயமாக வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.

புதிய தொழில் முயற்சிகளை தவிர்க்கவும். நண்பர்களால் பிரச்னை வர வாய்ப்புள்ளதால் விழிப்புடன் செயல்படுவது நல்லது. எதிலும் பொறுமையுடனும், கவனமுடனும் இருக்க வேண்டிய மாதம் இது.

அதிர்ஷ்டமான நாட்கள்:ஏப்ரல் 14, 29,30 மே 01, 08,09,10,11,12.

சந்திராஷ்டம நாட்கள்: மே 04, 05, 06.

மீனம்

வாழ்வின் ஒவ்வொரு நாளும் ரசித்து வாழும் மீன ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் குருபகவான் உங்கள் ராசிக்கு 11 ல் நீச பங்க ராஜயோகம் பெற்று சஞ்சரிப்பதால் வாழ்வில் புதிய மாற்றங்களும், ஏற்றங்களும் ஏற்படும்.

எதிலும் வெற்றி பெறும் சூழல் உருவாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.

பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கோபத்தை தவிர்க்கவும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. புதிய ஆபரணங்கள் சேரும். மனதில் உற்சாகமும், எதையும் சாதிக்கும் திறனும் உண்டாகும்.

வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தாய் மற்றும் உறவுகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களை கட்டும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் சிறிய பிரச்னைகள் வந்து நீங்கும்.

பங்கு சந்தையில் லாபம் உண்டு. வங்கி கடன் முயற்சிகள் சாதகமாக அமையும். கணவன் மனைவிக்குள் சுமுகமான சூழல் நிலவும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும்.

எதிர்பாராத அதிர்ஷ்டமும், தன வரவும் உண்டு. தந்தை வழியில் சிறு மனகசப்புகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாக இருக்கும். ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். உங்கள் திறமை வெளிப்படும். அலுவலகத்தில் நீங்கள் பிரபலமாவீர்கள். சக ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். முக்கிய பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். அவர்களால் ஆதாயம் உண்டு. வீடு, வாகன வசதி உண்டாகும். பல வகையில் லாபம் பெருகும். நண்பர்கள், உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஏப்ரல் 14,15,16,17. மே 02,03,04,10,11,12,13.

சந்திராஷ்டம நாட்கள்: மே 06, 07, 08.

– Dina Karan