பிரித்தானியாவில் ஷாப்பிங் சென்ற செவிலியருக்கு கிடைத்த எதிர்பாராத ஆச்சரியம்!

3783

பிரித்தானியாவில் ஷாப்பிங் சென்றிருந்த செவிலியர் ஒருவரை வரிசையில் காத்திருக்க வைக்காமல் பொருட்களை வாங்க மக்கள் அனுமதித்தனர்.

அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் பணியாற்றுபவர் Isobelle Smithson (24).

செவிலியர் என்ற முறையில் வரிசையில் நிற்பவர்களைத் தாண்டி பொருட்களை வாங்க அனுமதிக்கப்பட்டதால் சற்றே குற்ற உணர்ச்சியுடன் நின்றுகொண்டிருந்திருக்கிறார் Isobelle.

அப்போது அவரை நெருங்கிய ஒருவர், நீங்கள் மருத்துவமனை பணியாளரா என்று கேட்க, சண்டைக்கு வருகிறாரோ என பயந்து, சத்தத்தை உயர்த்தி, ஆமாம் அதற்கென்ன என்று கேட்டிருக்கிறார்.

உடனே அந்த நபர், Isobelle கையில் 50 பவுண்டுகளைக் கொடுத்து, இதைக் கொண்டு உங்கள் கட்டணத்தை செலுத்துங்கள் என்று கூறியிருக்கிறார்.

அவர் இப்படிக் கூறுவார் என்று சற்றும் எதிர்பாராத Isobelle, வேண்டாம் என மறுக்க, அந்த பணத்தை அவரது ட்ராலியில் வைத்த அந்த நபர், இது என் சார்பிலும் என் மனைவி சார்பிலும் நீங்கள் செய்யும் பணிக்காக ஒரு சிறு நன்றிக்கடன் என்று கூற, நெகிழ்ந்து போயிருக்கிறார் Isobelle.

பின்னர், அந்த மர்ம நபர் யார் என்பதை தேடிக் கண்டுபிடித்துவிட்டார் Isobelle. அவரது பெயர் Luke Welsh (30), அவர் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர்.

Isobelle செய்யும் சேவையை ஒப்பிட்டால், நான் செய்தது ஒன்றுமே இல்லை என்று கூறும் Luke, மருத்துவப்பணியாளர்கள் இந்த காலகட்டத்தில் செய்து வரும் பணி அற்புதமானது என்று கூற, இருந்தாலும் Luke செய்தது அருமையான ஒரு விடயம் என நெகிழ்கிறார் Isobelle.