லண்டனில் பாரம்பரிய மருத்துவம் மூலம் கொ ரோனாவில் இருந்து மீண்ட நபர்! நடந்ததை விளக்கிய தமிழர்

824

அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த லட்சிய இந்தியா இயக்கத்தின் தலைமை வழிகாட்டி பொன்ராஜ், கொரோனா தொற்றால் லண்டனில் பாதிக்கப்பட்ட தனது நண்பர் சித்த மருத்துவத்தின் மூலமாக அதிலிருந்து மீண்டதாக கூறியுள்ளார்.

LONDON NHS Admission கிடைக்காத நிலையிலேயே அவர் சித்த மருத்துவத்தின் மூலம் குணமானதாக பொன்ராஜ் கூறுகிறார்.

அவர் கூறுகையில், எனது நண்பர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் 40 சதவீதப் பணியாளர்கள் கொரோனா நோய்த் தொற்று பாசிட்டிவ் ஆகி பாதிக்கப்பட்டுள்ள நிலைமையில், அவரும், அவரது மனைவியும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

NHS அட்மிஷன் முதல் ஸ்டேஜில் போட முடியாது, 4- வது ஸ்டேஜில் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிப்போம் என்று கூறிவிட்டனர்.

மேலும் வீட்டிலேயே இருங்கள், 4-ஆவது நிலைக்கு நோய் முற்றினால் மட்டும் எங்களை அழையுங்கள் என்று சொல்லி, வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், அவர்கள் நமது பாரம்பரிய சித்த மருத்துவத்தையும், நமது தமிழ் பாரம்பரிய உணவு பழக்கவழக்கத்தையும் கடைப்பிடித்து மீண்டெழுந்தந்தார்.

இப்படி தான் லண்டன் நண்பர் என்னிடம் கூறினார் – நண்பர்களே, கொரோனா மிகக் கொடுமையானது.

நான் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்றோடு 21 நாட்கள் ஆகிவிட்டன. 10 நாட்களிலேயே அதிலிருந்து மீண்டு விட்டாலும், உடல் அசதி மற்றும் அதிக நேரம் பேச முடியாத நிலை (நுரையீரல் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும்) இப்போதும் எனக்கு உள்ளது.

நான் வழக்கமான (Paracetamol) மாத்திரைகளுடன், சில சித்த மருத்துவ முறைகளையும், சிறு சிறு உடற்பயிற்சி, சூரிய ஒளியில் அமர்தல், மஞ்சள் மற்றும், ஓமம் கலந்த தண்ணீரில் ஆவிப்பிடித்தல் எனப் பக்கவிளைவுகள் அற்ற நம் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தே இதிலிருந்து மீண்டேன்.

சித்த மருத்துவத்தில் உள்ள நமது உணவுப்பழக்கங்கள் கரோனா அறிகுறிகளின் தாக்கங்களை, வலிகளைக் குறைக்கின்றன என்பது நான் கண்ட அனுபவபூர்வமான உண்மை. நிலவேம்பு குடிநீர் சூரணம் காய்ச்சலை வெகுவாகக் கட்டுப்படுத்தியது.

என் மனைவிக்கு ஏற்கனவே சில பிரச்னைகள் இருப்பதால் கொரோனா அவரை அதிகம் படுத்தி எடுத்துவிட்டது, அவர் எழுந்து உட்காரவே 16 நாட்கள் ஆகிவிட்டன. நாங்கள் 111 அழைப்பை மூன்று முறை தொடர்புகொண்டோம், ஆனால் அறிகுறிகள் அனைத்தையும் கேட்டு விட்டு, வீட்டிலேயே இருங்கள் என்று அறிவுறுத்தினார்களே தவிர, வேறு எந்த உதவியும் செய்யவில்லை.

கொரோனாவை கண்டு மிரளவேண்டாம். முடிந்தவரை அது அண்டாமல் விலகியிருங்கள், தொற்றிக்கொண்டால் பயம் கொள்ள வேண்டாம். துணிவுடனும், நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்.

மருத்துவ உலகம், சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை ஆய்ந்தறிந்து, அதனை மக்களுக்குப் பயன்படச் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.