உங்கள் ராசிப்படி இந்த ராசிக்காரர்களை மட்டும் காதலித்து விடாதீங்க… வாழ்க்கையே போய்விடுமாம்

495

ஒருவரின் காதல் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் அவர்கள் பிறந்த ராசி என்பது முக்கியமான பங்கை வகிக்கிறது

அந்தவகையில் எந்தெந்த ராசியினருக்கு எந்த ராசிக்காரர்களுடன் காதல் ஒத்துப்போகாது என பார்ப்போம்.

மேஷம் மற்றும் கன்னி

இது மிகவும் நச்சு இராசி ஜோடிகளில் ஒன்றாகும். மேஷம் எப்போதுமே தடைகளை முறியடிக்க முற்படுகையில், கன்னி ராசிக்காரர்கள் சிரமங்களை சமாளிக்க திட்டமிடுகிறார்கள்.

இவர்கள் இருவரும் சிறந்த நண்பர்களாக இருக்கலாம் , ஒரே டீமில் வேலை செய்யலாம் ஆனால் காதல் உறவை பொறுத்தவரை இவர்கள் நச்சு ஜோடிகளாவர்.

இருவருமே தங்களின் செயல்கள்தான் சரியென்ற பிடிவாத குணமுடையவர்கள்.

கடகம் மற்றும் மகரம்

மகரம் என்பது தூய்மையான ஒழுக்கத்தைப் பற்றியது, கடக ராசியோஅருமையான அன்பு மற்றும் உணர்ச்சிகள் நிறைந்தது, இவர்கள் எப்பொழுதும் அன்பை கொடுக்க தயாராக உள்ளார்கள்.

வெவ்வேறு ரசனைகள் கொண்ட இவர்கள் இருவரும் தங்கள் நலன்கள் சார்ந்து வாக்குவாதத்தில் ஈடுபடும்போது இது பல முட்டாள்தனமான சச்சரவுகளை ஏற்படுத்தும். இறுதியில் இவர்களின் காதல் நச்சு உறவாக மாற்றும்.

கடகம் மற்றும் தனுசு

கடக ராசிக்காரர்கள் தாயுள்ளம் கொண்டவர்கள் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள்.

இந்த இருவரின் உறவும் ஆரம்பத்தில் மிகவும் சரியானது போல தோன்றலாம் ஆனால் இவர்களில் ஒன்று கற்பிக்கிறது, மற்றொன்று கற்றுக்கொள்கிறது.

தனுசு ராசியின் அதீத சுதந்திர தேடல் கடக ராசிக்காரரிடம் இருந்து அவர்களை பிரிக்கும்.

கடக ராசிக்காரர் தங்களை கட்டுப்படுத்துவதை போல அவர்கள் உணர்வார்கள். இதனால் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு காதலில் அழியா காயத்தை ஏற்படுத்தும்.

சிம்மம் மற்றும் விருச்சிகம்

இந்த இரண்டு ராசிக்காரர்களின் முதல் ஈர்ப்பும் சிற்றின்பம்தான். இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் ஒரே ஒற்றுமை இதுதான்.

இவர்கள் இருவருக்குள்ளும் உடல்ரீதியான நெருக்கம் இருக்குமே தவிர அதற்க்குமேல் இந்த ஈர்ப்பும் இருக்காது. இதனால் இவர்களால் நீண்ட நாட்கள் அந்த உறவில் நிலையாக இருக்க முடியாது.

இவர்களின் உறுதியற்ற காதல் இருவருக்கும் நன்மையை விட தீமையைத்தான் ஏற்படுத்தும்.

மிதுனம் மற்றும் கன்னி

இந்த ராசிக்காரர்கள் இருவரும் வேடிக்கையானவர்கள் மற்றும் எளிதில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள கூடியவர்கள்.

இது ஒருவரையொருவர் எளிதில் ஈர்க்கும் ஆனால் இவர்களின் இந்த குணங்களே விரைவில் இவர்கள் உறவில் பிரச்சினையாக மாறும்.

கன்னி ராசிக்காரர்களின் சந்தேக குணம் மிதுன ராசிக்காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.

சிலசமயம் மிதுன ராசிக்காரர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை வைப்பார்கள். இறுதியில் காதலில் கசப்பான உணர்வுடன் இருவரும் பிரிவார்கள்.

துலாம் மற்றும் ரிஷபம்

துலாம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இடையில் நிறைய குணங்கள் ஒத்துப்போகும், இருப்பினும் இவர்களின் உறவு மோசமானதாக மாறுவதற்கு காரணம் இவர்கள் இருவரும் தங்களின் விருப்பத்திற்கேற்ப இருக்க வேண்டும் என்று நினைப்பதுதான்.

இரண்டு ராசிகளும் உறுதியானவர்கள், அழகியல் மற்றும் காதல் இரண்டையுமே இவர்கள் ரசிப்பார்கள்.

இருப்பினும் ரிஷப ராசிக்காரர்களின் உள்ளார்ந்த விசுவாசம் உறவைக் கட்டுப்படுத்துவதாகத் தோன்றும், மேலும் துலாம் ராசிக்காரர்கள் தான் எப்போதும் சரியானவர் என்று நிரூபிக்க விரும்புவது இருவருக்குள்ளும் தொடர்ந்து சிக்கல்களை உண்டாக்கும். இறுதியில் அவர்களின் காதல் நச்சானதாக மாறும்.

விருச்சிகம் மற்றும் மீனம்

இவர்கள் இருவருமே உணர்ச்சிவசப்படக்கூடிய ராசிகளாவர். இருவருமே உணர்ச்சிகள் மிகுந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அதனை வெளிப்படுத்தும் விதம் வித்தியாசமானதாக இருக்கும், குறிப்பாக காதலில்.

விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் உணர்ச்சிகளை உடனடியாக வெளிப்படுத்துவார்கள், மீன ராசிக்காரர்கள் தங்களின் உணர்ச்சிகளை மிகவும் மெதுவாகவே வெளிப்படுத்துவார்கள்.

இருவருமே காதலில் உள்ளார்ந்த ஆர்வம் கொண்டவராக இருப்பார்கள்.

விருச்சிக ராசிக்காரர்கள் பொறுப்பற்றவராக இருப்பார்கள், மீன ராசிக்காரர்கள் அதீத பொறுப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இதனாலேயே இவர்களின் உறவு நச்சு உறவாக மாறும்.

கும்பம் மற்றும் ரிஷபம்

கும்பம் மற்றும் ரிஷப ராசிக்காரர்கள் இருவரும் முற்றிலும் வித்தியாசமான ரசனை கொண்டவர்கள்.

ரிஷப ராசிக்காரர்கள் கும்ப ராசிக்காரர்கள் எப்பொழுதும் எதுவும் செய்யாமல் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

ஆனால் கும்ப ராசிக்காரர்கள் அவ்வாறு இருக்க மாட்டார்கள், இது அவர்கள் உறவில் விரக்தியை ஏற்படுத்தும். இறுதியில் ரிஷப ராசிக்காரர்களின் இதயம் இந்த உறவில் உடைவது நிச்சயம்.