தாய்நாட்டிற்கு தமிழன் சுந்தர்பிச்சை கொடுத்த மிகப்பெரிய கொ ரோனா தடுப்பு நிதி! எவ்வளவு தெரியுமா?

12355

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தாய் நாடான இந்தியாவிற்கு கொரோனா தடுப்பு நிதியாக 5 கோடி ரூபாய் கொடுத்து உதவியுள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸால் தடுமாறி வருகிறது. இதற்காக தங்களால் முடிந்த நிதியுதவியினை தங்கள் நாட்டிற்கு, அந்நாட்டை சேர்ந்த திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்தவரான சுந்தர் பிச்சை இந்தியாவிற்கு கொரோனா தடுப்பு நிதியாக 5 கோடி ரூபாய் கொடுத்து உதவியுள்ளார்.

கிவ் இந்தியா என்கிற தன்னார்வ அமைப்பு நன்கொடையாளர்களுக்கும் உதவி தேவைப்படும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு தற்போது கூகுள் CEO சுந்தர் பிச்சை 5 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார்.

தினசரி கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கொரோனா ஊரடங்கு நேரத்தில் தேவையான பண உதவி வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என GIVE INDIA தெரிவித்துள்ளது.

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சை அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் டுவிட் செய்துள்ளது.

ஏற்கனவே கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை மீட்க சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியாக வழங்கியுள்ளது. இதில் 200 மில்லியன் டொலர் தொகை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் சிறு தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.