சித்திரை மாதத்தை ஏன் தமிழ் வருடப்பிறப்பு என கொண்டாடுகிறோம் எனத் தெரியுமா?

685

மகிழ்ச்சியை அள்ளித்தரும் தமிழ் வருடப் பிறப்பு இந்த நாளைத் தான் நாம் சித்திரை முதல் நாள் தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தை ஏன் தமிழ் வருடப்பிறப்பு என கொண்டாடுகிறோம் எனத் தெரியுமா?

தமிழ் புத்தாண்டு என்பது பங்குனி மாதத்தின் இறுதி நாளன்று வீட்டையும் சுத்தம் செய்து, பழங்கள் எல்லாம் வாங்கி, பூஜை அறையில் வைத்து அதன் கூடவே நம் வீட்டில் இருக்கும் நகைகளையும், பணத்தையும் வைத்து விட்டு முக்கியமாக கண்ணாடியை வைப்பர்.

கண்ணாடி எதற்கு என்றால் காலையில் நாம் எழுந்தவுடன் பூஜை அறையில் உள்ள பழங்களை பார்த்து விட்டு பிறகு கண்ணாடியைப் பார்க்க வேண்டும்.

தமிழர் பண்பாட்டின் உயர்ந்த அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில்கொண்டாடப்படும் விழாவான இந்தத் தமிழ் புது வருடத்தில் இறைவனை வழிபடுதல், விருந்தோம்பல், தானதர்மம் செய்தல், பெரிவர்களிடம் ஆசிபெறுதல் என்பவைகளையும் நாம் கடைப்பிடிப்பது வழக்கமாக உள்ளது.

சித்திரை மாதம் முதல் நாளை உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
தமிழ் நாள்காட்டி சூரியனை அடிப்படையாகக் கொண்டது. பூமி சூரியனைச் சுற்றிவரும் சுற்றுபாதை (360 பாகை) பன்னிரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது. சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14-ஆம் நாள் முதல் மே மாதம் 14-ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.

புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.

சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில் காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும்.

அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுதாக அமைந்துள்ளது.

பிரம்மதேவர் உலகைப் படைத்தது சித்திரை முதல் நாளில் என்கின்றன சில ஞான நூல்கள். சித்திரை மாதத்தை ஏன் தமிழ் வருடப்பிறப்பு என கொண்டாடுகிறோம் எனத் தெரியுமா?