கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவ பணியாளர்களுக்கு கூகுள் வழங்கியுள்ள கௌரவம்

212

தொடர்ந்தும் உலகை அச்சுறுத்திவரும் கொரோனாவிற்கு எதிராக மருத்துவத்துறை சார்ந்தவர்கள் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்தவர்கள் என பல தரப்பினரும் இடைவிடாது போராடி வருகின்றனர்.

இவர்களுக்கு அந்தந்த நாட்டு அரசும், மக்களும் பாராட்டுக்களையும், கௌரவத்தினையும் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் இணைய ஜாம்பவான் ஆன கூகுள் இவர்களுக்காக விசேட டூடுள் ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் வாழ்த்துக்களையும், கௌரவத்தினையும் அளித்துள்ளது.

இதற்கு முதல் சமூக இடைவெளி உட்பட கொரோனா தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்கான தகவல்களை உள்ளடக்கிய டூடுலினை அறிமுகம் செய்திருந்தது.

இதன் பின் நேற்றைய தினத்திலிருந்து மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத் துறையினைரை கௌரவிக்கும் வகையிலான டூடுலினை உருவாக்கி தனது தேடற்பொறியில் காட்சிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.