கொ ரோனா பாதிப்புக்காக தனது சொத்தில் ரூ.7 ஆயிரத்து 500 கோடிகளை அள்ளி கொடுத்த இளம் வயதிலேயே கோடீஸ்வரர் ஆன நபர்

742

கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக தனது சொத்தில் ரூ.7 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள பங்குகளை கோடீஸ்வரரும் டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியுமான ஜாக் வழங்கியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வேலையில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையில், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவும், மக்களுக்கு உதவவும் பல்வேறு நோக்கிலும் பல்வேறு நிறுவனங்கள் பல கோடி ரூபாய்களை நிவாரண உதவிகளாக வழங்கி வருகின்றன.

இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டோர்சி தனது சொத்தில் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,98,33,400 ஸ்கொயர் ஈக்விட்டி பங்குகளை லிமிட்டட் லையபிலிட்டி கம்பெனி என்ற நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார்.

இந்த பங்குகள் மூலம் கிடைக்கும் பணம் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

தற்போது 43 வயதாகும் ஜாக் தனது 29வது வயதில் டுவிட்டர் சமூகவலைதளத்தை தொடங்கி இளம் வயதிலேயே பெரும் கோடீஸ்வரராக உயர்ந்தார், இன்று உலகளவில் பல சமூகவலைதளங்கள் இருந்தாலும் அதில் டுவிட்டர் முதன்மையான இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.