ருசியுடன் சத்துக்கள் மிகுந்த பூண்டு மிளகுசாதம்: செய்வது எப்படி?

586

சில பேருக்கு அடிக்கடிக்கு சளி பிடிக்கும். இதனால் பெரும் அவதி படுவார்கள். இந்த சளியால் சில நேரங்களில் தொண்டை கரகரப்பாக கூட மாறலாம்.

இவர்கள் அடிக்கடிக்கு சாதத்தில் பூண்டு, மிளகு சேர்த்து கொண்டால் இப்பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

தேவையான பொருட்கள்:

 • பாஸ்மதி (சாதம்) – ஒரு கப்
 • கடுகு – அரை தேக்கரண்டி
 • உளுந்து – அரை தேக்கரண்டி
 • கடலை பருப்பு – அரை தேக்கரண்டி
 • காய்ந்த மிளகாய் – 3
 • வெங்காயம் – ஒன்று
 • பூண்டு – 10 பல்
 • மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி
 • கறிவேப்பிலை – சிறிதளவு
 • கொத்தமல்லித்தழை- சிறிதளவு
 • நெய், உப்பு – தேவைக்கு

செய்முறை:

 • வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து முதலில் நெய் ஊற்ற வேண்டும். நெய் உருகியதும், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கணும். கூடவே, காயந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
 • பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். பின்னர், பொடியாக நறுக்கி வைத்த பூண்டை உப்பு சேர்த்து வதக்கவும்.
 • பின்னர் வடித்து வைத்த சாதத்தை இந்த கலவையில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
 • இறுதியாக, மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கி சுடச்சுட பரிமாறினால் சூப்பர் பூண்டு, மிளகு சாதம் தயார்.