கொ ரோனா தொற்று – லண்டனில் 30 வயதான ஈழத் தமிழ் ஊடகவியலாளர் ம ரணம்

773

லண்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸால் உலகளவில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

பிரித்தானியாவில் மட்டும் நேற்றுவரை இலங்கையர்கள் ஒன்பது பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதில் இரண்டு மருத்துவர்களும், இரண்டு தமிழர்களும் என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் லண்டனில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தில்லைநாதன் ஆனந்தவர்ணன் என்ற 30 வயது இளைஞனே கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

ஈழத்து இளம் ஊடகவியலாளரான இவர் பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகன் என தெரியவந்துள்ளது.