உடல் எடையை சட்டென குறைக்கும் ஆயுர்வேத டீ! வேறு பல நன்மைகளும் உள்ளதாம்

724

இன்றைய காலத்தில் உடல் எடையால் பலர் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

இதற்காக பலர் கண்ட கண்ட எத்தனையே வழிமுறைகள், டயட்களும் ஆலோசணையின்றி கடைப்பிடித்து வந்த வண்ணம் உள்ளனர்.

ஆனால் அந்த காலத்தில் நமது முன்னோர்கள் உடல் எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை முறையே பின்பற்றி இயற்கை முறையில் உடலை கட்டுக்கோப்பாக வைத்து வந்தனர்.

ஏனெனில் ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்வதால் உடல் எடை குறைவதோடு, பொலிவான மற்றும் அழகான சருமத்தைப் பெறலாம்.

அதுவும் ஒரே ஒரு ஆயுர்வேத டீயை அன்றாடம் குடித்து வந்தால் போதும், உங்கள் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சிக்கென்ற உடலமைப்பைப் பெறலாம்.

பொதுவாக ஆயுர்வேத மருத்துவத்தில், மூலிகைகள் மற்றும் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு தான் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த ஆயுர்வேத டீயை அன்றாடம் குடித்து வந்தால் போதும், உங்கள் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சிக்கென்ற உடலமைப்பைப் பெறலாம்.

அந்தவகையில் இந்த ஆயுர்வேத டீயை எப்படி செய்யலாம் என்பதையும் இதனை குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
 • சீரகம் – 1 டீஸ்பூன்
 • மல்லி – 1 டீஸ்பூன்
 • சோம்பு – 1 டீஸ்பூன்
 • கிராம்பு – 7
 • இஞ்சி – 2 துண்டு
 • பட்டை – 2 இன்ச்
 • தண்ணீர் – 1 லிட்டர்
செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, சோம்பு, கிராம்பு, இஞ்சி, பட்டை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, பின் 10 நிமிடம் கழித்து, வடிகட்ட வேண்டும்.

நன்மைகள்
 • இதில் உள்ள மசாலாப் பொருட்கள் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தமாக்கும்.
 • செரிமான பாதை சுத்தமாகி, செரிமான மண்டலத்தின் இயக்கம் சீராக நடைபெற்று, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
 • மசாலாப் பொருட்களை சேர்த்து டீ செய்து குடிப்பதன் மூலம், உடல் உறுப்புக்களில் இருந்த இடையூறுகள் நீங்கி, அதன் செயல்பாடு அதிகரித்து, உடல் உறுப்புக்களின் ஆரோக்கியம் மேம்படும்.
 • சோம்பு, பட்டை, கிராம்பு போன்றவற்றில் உள்ள காரத்தன்மை, உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் தன்மை உள்ளதால் இந்த பொருட்களைக் கொண்டு டீ போட்டு குடிக்கும் போது, நிச்சயம் உடல் எடை குறையும்.
 • உடலில் இரத்தம் சுத்தமாகி, உறுப்புக்கள் சீராக இயங்கினாலே, சருமம் சுத்தமாகவும், அழகாகவும் இருக்கும்.