அமேசான் மழைக்காட்டுக்குள் புகுந்த கொ ரோ னா வைரஸ்: தீ விர சி கிச்சை பிரிவில் 15 வயது சிறுவன்

492

அமேசான் மழைக்காட்டுக்குள் வசிக்கும் யானோமாமி பூர்வகுடி சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளான்.

பிரேசிலில் சுமார் 300 பூர்வகுடி சமூகங்களைச் சேர்ந்த எட்டு லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

இந்நிலையில் வெளியுலக தொடர்பு ஏதுமில்லாமல் காட்டின் ஆழமான பகுதிகளில் இவர்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த வாரம் கொகாமா என்ற பூர்வகுடி சமூகத்தை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தற்போது யானோமாமி என்ற சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு தொற்று பரவியுள்ளது.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு சிறுவனுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமேசான் பூர்வகுடிகளில் இதுவரை ஏழு பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.