நீண்ட நாள் நோய் தாக்காமல் இருக்க நம் முன்னோர்கள் இந்த இலையை தான் சாப்பிட்டாங்களாம்!

848

பச்சை இலையுடைய காய்கறிகள் உணவில் சேப்பங்கிழங்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவற்றில் குறைவனான கலோரிகள், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் உள்ளன.

அதுமட்டுமின்றி பல்வேறு உணவு பாரம்பரியத்தில் சேப்பங்கிழங்கு இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

அந்தவகையின் சேப்பங்கிழங்கு உட்கொள்வதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • சேப்பங்கிழங்கு இலைகளில் உயர்ந்த அளவு வைட்டமின் சி சத்து மற்றும் பாலிஃபீனால் கூறுகள் இருப்பதால் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. தன்னுடல் சார்ந்த நோய், புற்றுநோய், இதய கோளாறுகள் மற்றும் பல்வேறு நோய்கள் உண்டாகக் காரணமான தீங்கு விளைவிக்கும் கூறுகளுடன் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் போராடுகிறது.
  • பச்சை இலையுடைய காய்கறிகளான சேப்பங்கிழங்கு இலைகள், பரட்டைக்கீரை, பசலைக்கீரை போன்றவை இதயத்திற்கான வரப்பிரசாதங்கள் ஆகும். இந்த வகை காய்கறிகளை தொடர்ந்து உட்கொண்டு வருவதால் இதய நோய் உண்டாவதற்கான அபாயம் 16% வரை குறையும்.

  • இவற்றில் உயர்ந்த அளவு நைட்ரேட் உள்ளன. இவை இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகின்றன. ஆகவே உங்கள் இதயம் ஆரோக்கியத்துடன் இருக்க நீங்கள் விரும்பினால் சேப்பங்கிழங்கு இலைகளை உட்கொள்ளத் தொடங்குங்கள்.
  • எந்த உணவிலும் இந்த இலைகளை நீங்கள் சேர்த்து உட்கொள்ளும் அளவிற்கு மிகவும் எளிமையான உணவாகும். இதில் உள்ள குறைந்த கொழுப்பு, குறைந்த கலோரி, உயர் நார்ச்சத்து கலவை உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவுகிறது.
  • இந்த இலைகள் அதிக நீர்ச்சத்து கொண்டவை என்பதால் உங்கள் உடலை பாதுகாக்கவும் உதவுகிறது. குறைவாக உட்கொள்ளும் போதும் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது.

முக்கிய குறிப்பு

சேப்பங்கிழங்கு இலையை சமைக்காமல் பச்சையாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சமைக்கப்படாத பச்சை இலைகள் மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது என்பதால் இதனை சமைத்த பின்பு மட்டுமே உண்ண வேண்டும்.

இதில் உள்ள ஆக்சலேட் காரணமாக இந்த விஷத்தன்மை காணப்படுகிறது. இவை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் மற்றும் கற்களை தோற்றுவிக்கலாம்.