தினமும் 3 கற்பூரவல்லி இலைகளை மெல்லுவதினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

962

கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் மருத்துவ குணமும கொண்ட ஒரு மூலிகை செடி தான் கற்பூரவள்ளி.

இதன் இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது

குறிப்பாக 100 கிராம் கற்பூரவள்ளியில் 4.3 கிராம் கொழுப்பு, 25 மிகி சோடியம், 1,260 மிகி பொட்டாசியம், 69 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 9 கிராம் புரோட்டீன் உள்ளது.

மேலும் இதில் வைட்டமின் ஏ (34%), கால்சியம்(159%), வைட்டமின் சி (3%), இரும்புச்சத்து (204%), வைட்டமின் பி6 (50%) மற்றும் மக்னீசியம் (67%) உள்ளது.

அந்தவகையில் கற்பூரவள்ளியை தினமும் சாப்பிட்டு வந்தால் ஏராளமான பயன்கள் உள்ளது. தற்போது அந்த ஆரோக்கிய பயன்கள் பற்றி பார்ப்போம்.

  • கற்பூரவள்ளி இலைகளை ஒருவர் தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கை குறையும்.
  • இதில் உள்ள வைட்டமின் கே சத்தானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் தமனிகளில் கால்சியம் நுழைவதைத் தடுக்கும். இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் மற்றும் சரியான இரத்த உறைதலை ஊக்குவிக்கும்.
  • கற்பூரவள்ளி ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கி, முதுமைத் தோற்றத்தை தடுப்பதோடு, பல்வேறு சரும நோய்களையும் எதிர்க்கும்.
  • கற்பூரவள்ளி இலைகளில் டயட்டரி நார்ச்சத்து உள்ளதால் தினமும் உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
  • கற்பூரவள்ளி இலைகளில் உள்ள தைமோல் மற்றும் கார்வாக்ரோல் என்னும் உட்பொருட்கள் செரிமான சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள தைமோல் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் செயல்களைச் செய்கின்றன.
  • கற்பூரவள்ளி இலையை பச்சையாக வாயில் போட்டு மென்று திண்பது நல்லது. இதனால் அதில் உள்ள தைமோல் மற்றும் கார்வாக்ரோல் உடனடி நிவாரணம் அளிக்கும்.
  • உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நற்பதமான கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் பொட்டாசியம் வளமான அளவில் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத் துடிப்பைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும்.
  • ஒரு டம்ளர் ஜூஸ் அல்லது வெதுவெதுப்பான நீரில் 3 துளிகள் கற்பூரவள்ளி எண்ணெயை சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும். இப்படி 4-5 நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால் நெஞ்சு சளியில் இருந்து நல்ல பலன் கிடைக்கும்.
  • உங்கள் எலும்பு ஆரோக்கியமாக பிரச்னைகளின்றி இருக்க வேண்டுமானால், கற்பூரவள்ளி இலையை அன்றாடம் சாப்பிடுங்கள்.
  • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால், ஜூஸ் அல்லது வெதுவெதுப்பான நீரில் 2-3 துளிகள் கற்பூரவள்ளி எண்ணெயை சேர்த்து கலந்து குடிக்கலாம். இதனால் செரிமானம் விரைவில் மேம்படும்.