கொரோனா பாதிப்பு: பிரதமர் மோடிக்கு மாணவனின் சூப்பரான ஐடியா- குவியும் பாராட்டுகள்

1434

கொரோனா பாதிப்பிற்கு ஆலோசனை எழுதி மாணவன் ஒருவர் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதில் அந்த மாணவன் கொரோனாவினால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சினையை தீர்க்க அனைத்து மத டிரஸ்ட்கள் வைத்திருக்கும் பணத்தில் 80 சதவீதத்தை அரசு பயன்படுத்திக் கொண்டாலே பிரச்சனை தீர்ந்து இந்தியா இறுதியில் முன்னேற்றம் அடைந்து விடும் என்று யோசனை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாணவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்துக்கு இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாக்யராஜ் கூறியிருப்பது,

இந்த மாணவரின் ஐடியாவை செயல்படுத்துங்கள். பிரதமர் மோடிக்கு தென் இந்திய எழுத்தாளர் சங்கத்தில் இருந்து நான் கடிதம் எழுதி கோரிக்கை வைத்து உள்ளேன்.

நீங்களும் இதே போல் இந்த விஷயத்தை பிரதமருக்கு வலியுறுத்த வேண்டும். மனிதனுக்கு ஏற்றமோ தாழ்வோ வரும் போது இதுவும் கடந்து போகும் என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பிரச்சனையாக இருந்தாலும் அது போலவே விரைவில் கடந்து போகும். அனைவரும் தனித்து இருக்க வேண்டும்.

மக்கள் அரசாங்கம் சொல்லும் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். அதேசமயம் நோயை எண்ணிப் பயந்து விடக்கூடாது. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எங்களின் எழுத்தாளர் சங்கம் சார்பில் தலா 50 ஆயிரம் நிவாரண நிதி அனுப்பப்படுகிறது.

அதே போல் நமக்காக காவல்துறையினர், டாக்டர், நர்சுகள், அரசாங்க அதிகாரிகள் என பல அதிகாரிகள் சேவை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார்.