விஜய் டிவி-சன் டிவி TRP யுத்தம், எப்படி இறங்கிவிட்டார்கள் பாருங்க!

288

தொலைக்காட்சி உலகில் எப்போதும் நம்பர் 1 இடம் என்றால் அது சன் டிவி தான். இந்தியளவில் அனைத்து சேனல்களுக்கும் சிம்மசொப்பனமாக இருந்து வருகின்றது.

அப்படியிருக்க தமிழகத்தில் சன் டிவிக்கு அடுத்த இடத்தை பிடிக்க விஜய், மற்றும் ஜீ தமிழுக்கு தான் கடும் போட்டி.

ஆனால், கடந்த வாரம் விஜய் டிவியே இரண்டாம் இடத்தை பிடித்தது. மேலும், தற்போது கொரோனா பாதிப்பால் மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர்.

இதனால் கண்டிப்பாக TRP அடித்தே ஆகவேண்டும் என சன் மற்றும் விஜய் டிவிக்கு இடையே கடும் போட்டி நடந்து வருகிறது.

சன் டிவி மெட்டி ஒலி, தங்கம் அதோடு நாடோடிகள்2 போன்ற சீரியல், படம் என இறக்க, விஜய் டிவி தன்னுடைய பேவரட் நிகழ்ச்சியான லொல்லு சபாவை களத்தில் இறக்கியுள்ளது.

இதனால் இரண்டு சேனல்களும் வரும் வாரங்களில் கடும் போட்டியை சந்திக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.