இரவில் மா த்திரையை போட்டு தூங்கச் சென்ற தம்பதிகள்! காலையில் கா த்திருந்த பேர திர்ச்சி

812

கொரோனா வைரஸினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை சாதகமாக பயன்படுத்தி, பல திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவது வேதனையை அளிக்கின்றது.

இந்திய மாநிலமான தமிழகத்தில் தூத்துக்குடியில், ஊரடங்கினைப் பயன்படுத்தி வீட்டில் இருந்த 100 பவுன் நகை, மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரில் வசித்து வரும் துறைமுக ஊழியர் வின்சென்ட். மனைவி ஜான்சி மற்றும் குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வந்த இவர், நேற்று இரவு உணவருந்திய பின்பு தம்பதிகள், தான் பதவாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, எப்பொழுதும் போல் கதவைப் பூட்டிவிட்டு தூங்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் காலையில் எழுந்த பார்த்த மனைவிக்கு, அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஆம் பீரோவில் பொருட்கள் எல்லாம் சிதறிக் கிடக்க, உள்ளே வைத்திருந்த நகை, பணம் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மனைவியின் கதறலைக் கேட்டு ஓடி வந்த கணவர், மனைவியை சமாதானம் செய்துவிட்டு, அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விசாரணை மேற்கொண்ட பொலிசார், மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனை நடத்தியுள்ளனர்.

இதில் மோப்பநாய் மோப்பம்பிடித்தப்படி சிறிது தூரம் சென்று விட்டு நின்றுவிட்டு, யாரையும் பிடிக்காமல் வந்துள்ளது. ஊரடங்கு சட்டத்தினை சாதகமாக பயன்படுத்தி, இவ்வாறு திருட்டு நடந்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.